அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அன்னியநேரடி முதலீடு(எப்.டி.ஐ.) செய்வதில் அதிகஆர்வம் காட்டுகின்றன என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி வாஷிங்டனில் தெரிவித்தார். மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி ஒரு வார காலபயணமாக அமெரிக்காசென்றார் . அவர் வாஷிங்டனில் தனது பயணத்தை நிறைவுசெய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுசெய்ய அதிகம் ஆர்வம் கொண்டுள்ளன.அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவு முதலீடுசெய்ய விதிமுறைகளை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது சாலைகட்டமைப்பு பணிகளில் முனைப்பு காட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற உள்கட்டமைப்பு பணிகளில் அன்னிய நிறுவனங்கள் அதிகமுதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு வாரகால அமெரிக்க பயணத்தில் முதலீட்டாளர்களுடன் நடத்திய கலந்துரை யாடல் நல்ல பலனை அளித்துள்ளது. இந்தியாவின் உள்கட்ட மைப்பு மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி அதிகமுன்னுரிமை தந்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே மிக சிறப்பான நல்லுறவு நிலவுகிறது. உள்கட்டமைப்பு துறைகளான சாலைகள் அமைத்தல், நெடுஞ்சாலை , கப்பல்துறைகளில் நேரடி அன்னிய முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் காற்று மாசற்ற போக்குவரத்தை ஊக்கப்படுத்துவதை மத்திய அரசு தனதுபணியாக கொண்டுள்ளது. பயோ எத்தனால், இயற்கை எரிவாயு, எத்தனால், மின் வாகனங்களால் காற்று மாசடைவது தடுக்கப்படும்.எனவே இத்தகைய போக்குவரத்தை எங்கள் அரசு ஊக்குவிக்கிறது.இவ்வாறு அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.