மத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல

இன்று நம் சென்னை மக்கள் அதிகம் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் சேவை திருவெற்றியூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின் மோடி அரசு மூலமாக, மத்திய அரசின் பங்களிப்போடு இது சாத்தியமாகி இருக்கிறது.


 சென்ற ஆட்சியின் போது தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருவெற்றியுர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வட சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல போராட்டங்கள் நடத்தியிருந்தோம்.  நானும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு கைதும் ஆகியிருக்கிறேன்;.  
அந்த வகையில் பொதுமக்களின் தொடர் வேண்டுகோளினால் இது சாத்தியமாயிருக்கிறது.  இதற்கு அனுமதியளித்தது மற்றும் விரைவு படுத்தியதில் மத்திய அரசின் பங்கு முக்கியமானது. 

ஆனால் மெட்ரோ திருவெற்றியுர் வரை விரிவாக்கம் நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு வெங்கையா நாயுடுஜியும் கலந்து கொள்வது மகிழ்;ச்சி.  ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரங்களில் நிச்சயம் பாரத பிரதமரின் படம் இடம் பெற்றிருக்க வேண்டும்.  விளம்பரங்களில் முதல்வரின் படம் தேவையில்லை என்று தீர்ப்பு வந்த போது… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் படம் இடம் பெற வேண்டும் என்று பெருமையுடம் கருத்து சொன்னவர்கள் நாம்.  


ஆனால் மத்திய அரசின் பங்களிப்போடு நடக்கும் திட்டங்களில் பிரதமரின் படமும் இடம் பெறுவது நியாயமானதாக இருக்கும்.  தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு தனது பங்களிப்பை பல திட்டங்களில் சிறப்பாகவே செய்து வருகிறது.  ஆனால், அந்த பங்களிப்பை மறைப்பது சரியல்ல.  
வருங்காலங்களில் மத்திய அரசின் பங்களிப்பிலான திட்டங்கள் இருப்பின, அதற்கான் விளம்பரங்களில் மக்கள் மத்த்pயில் தன் செயல்களால் இடம் பெற்ற பிரதமர் மோடியின் படமும் இடம் பெற வேண்டும் என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இத்தகைய விளம்பரங்களுக்கு பிரதமர் விருப்பப்பட மாட்டார்.  ஆனாலும் மத்திய அரசின் பங்களிப்பை விளக்குவது நமது கடமை.

              

இப்படிக்கு
                                        என்றும் மக்கள் பணியில்
                                            
                                 (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...