தமிழகத்தில், குளச்சல் துறை முகம் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று இத்திட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குளச்சல்துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல்அளித்தது. இதற்கு கேரளா எதிர்ப்புதெரிவித்து வருகிறது. இதனிடையே, கேரள சட்டப்பேரவையில் குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயிவிஜயன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குளச்சல் துறைமுகத்துக்கு எதிர்ப்புதெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு பிரதமர் மோடியை சந்தித்தது. கேரள மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அக்குழுவில் இடம்பெற்று இருந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தகுழு பிரதமரை சந்தித்தது. அப்போது, பினராயி விஜயனின் கோரிக்கையை உரியமுறையில் கேட்ட பிரதமர், குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிடமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் என்றார்.
ஆனால் கேரளாவின் கோரிக் கையை பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டார். அவர் கூறிய போது, நாட்டின்வளர்ச்சிக்கு இரண்டு துறைமுகங்களும் அவசியம். குளச்சல் துறைமுகதிட்டத்தை ஒருபோதும் கைவிட முடியாது. இரு துறைமுகங்களும் அருகருகே இருப்பதால் எவ்விதபாதிப்பும் ஏற்படாது. இரண்டுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு வர்த்தகம் அதிகரிக்கஉதவும். விழிஞம் துறைமுக திட்டத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.