சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதி

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.

ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிந்து விட்டதால் ஆந்திரத்துக்கு புதிய தலைநகர் உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தில்லிசென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.

அப்போது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்பட மாநிலத்துக்குத் தேவையான பல்வேறு உதவிகள் குறித்து மோடியிடம், சந்திரபாபுநாயுடு கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச்சந்தித்த அவர் கூறியதாவது:

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால்மட்டுமே மாநில மக்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதை பிரதமரிடம் எடுத்துரைத்தேன். இந்தவிஷயம் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார் என்றார் நாயுடு.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஆந்திரத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அண்மையில் மக்களவையில் தெரிவித்தார். இது ஆந்திர மாநிலத்தில் பெரும்எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக எதிர்க்கட்சிகள் இந்தவிவகாரத்தை கையில் எடுத்து சந்திரபாபுநாயுடு அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. இதனால் மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான பாஜக.,வுக்கும், தெலுங்கு தேசத்துக்கும் பின்னடைவு ஏற்படும் என்பதையும் மோடியிடம் சந்திரபாபுநாயுடு விளக்கியுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...