பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடும் போலி பாதுகாவலர் களை கடுமையாக தண்டிக்க வேண்டும்
ஒருதாய் தன் குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கிறாள். அதே நேரம் ஒருபசு தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களுக்கு பால்வழங்கி அவர்களை வாழவைக்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். அவரது கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. பசுக்கள் நமது செல்வம்.
உண்மையான பசு பாதுகாவலர்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும். ஆனால் சிலர் பசுக்களை பாதுகாப்பதாகக்கூறி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் பிரிவினை, பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிமேற்கொண்டு வருகின்றனர்.
அத்தகைய போலி பாதுகாவலர்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது நகரங்கள், கிராமங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபடமுயன்றால் தடுத்து நிறுத்தவேண்டும். போலி பாதுகாவலர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தண்டிக்கவேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமையே நமதுபலம். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது நமதுபிரதான கடமை. நாடு வளர்ச்சி அடைந்தால் நமது பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப் பட்டுவிடும். எனவே மாற்றத்தை, வளர்ச்சியை மனதில்வைத்து ஊக்கமுடன் செயல்படுவோம்.
தெலங்கானாவில் ரூ.40,000 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் ‘பகீரதன்’ திட்டத்தை அந்தமாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத்திட்டத்தின் தொடக்கவிழா மேடக்மாவட்டம் கோமதி பண்டா கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைத்து பேசியது.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.