1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதி

தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்புத்திட்டத்தின் கீழ், ஐந்து மாநிலங்கள் வழியாகச் செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடுசெய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேசிய நெடுஞ் சாலைகள் இணைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (என்.ஹெச்.ஐ.ஐ.பி.) கீழ், கர்நாடகம், பிகார், ஒடிஸா,ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வழியாகச்செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடுசெய்ய, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல் படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இருவழி சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக இந்தநிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், நிலம் கையகப்படுத்துதல் கட்டணம், மறுகுடியேற்றம், புனரமைப்பு, முன்கட்டுமானம் ஆகிய நடவடிக்கைகளுக்காக இந்தநிதி செலவிடப்படும்.

இந்தத் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு, 429 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கட்டுமானப்பணிகள் நிறைவடையும் என்றும், 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பராமரிப்புப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் பின் தங்கிய பகுதிகள் வழியே அமைக்கப்படும் தேசிய நெடுஞ் சாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...