பாஜ ஆட்சிசெய்யும் மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திர மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் சந்தித்தனர். கட்சியை பலப் படுத்துவது, மாநிலங்களில் செயல் படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பாஜக உயர்நிலைகுழு கூட்டம் கடந்த செவ்வாய் கிழமையன்று டெல்லியில் நடந்தது. இதில் மூத்த தலைவர்கள், முக்கியநிர்வாகிகள் பங்கேற்று கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, அனைத்துதரப்பு மக்களையும் பாஜகவினர் அரவணைத்து செல்லவேண்டும், ஏழைகளின் முன்னேற்றத்துக்கு பாடுபடவேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிலையில், பாஜ ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களை, பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் சந்தித்து பேசினார். காலை 10.30 மணியளவில் தொடங்கிய இக்கூட்டத்தில் குஜராத், மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான், அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜ ஆட்சிசெய்யும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
மாநில வளர்ச்சிக்காக செயல் படுத்தப்படும் அரசு நலத்திட்டங்களை விரைந்து முடிப்பது, சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை தவிர்ப்பது, மாநிலங்களை வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்வது உள்ளிட்டவை குறித்து முதல்வர்களிடம் பிரதமர் மோடி விவாதித்தார். அப்போது மாநில முதல்வர்களுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கட்சியை பலப் படுத்துவது குறித்து முதல்வர்களுடன் அமித்ஷா விவாதித்தார்.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.