குளச்சல் துறைமுகம் முதலில் நன்மை அடையபோவது மீனவர்கள் தான்

குளச்சல் அருகே உள்ள இனயத்தில் ரூ.28 ஆயிரம்கோடி செலவில் வர்த்தகதுறைமுகம் அமைக்கப்படுகிறது. இந்த துறைமுக நிர்வாக அலுவலகம் திறப்புவிழா கருங்கல் அருகே உள்ள தொலையா வட்டத்தில்  நடைபெற்றது.

விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இனயம் துறைமுக நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டிஅளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

குளச்சல் துறைமுகம் முதலில் மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருந்துவந்தது. அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொடுத்ததற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

குளச்சலில் வர்த்தகதுறைமுகம் அமைக்க அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோருக்கும் நன்றிதெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இங்கு துறைமுகம் வருவதால் குமரிமாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புமக்களுக்கும் ஜாதி, மத பாகுபாடின்றி அவரவர் திறமைக்கேற்ப வாழ்வுகொடுக்கும் திட்டமாக இது அமையும்.

மீனவர்கள் வாழ் வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்பது இதன் நோக்கம் அல்ல. மீனவர்கள் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கடலுக்குள் மணலை நிரப்பி இந்த துறைமுகம் அமைக்கப்படும்.

துறைமுகத்திற்காக 200 ஏக்கர் நிலம்மட்டும் கரையில் எடுக்கப்படும். 4 வழிச்சாலை, ரெயில் போக்கு வரத்து அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும். சிங்கப்பூர், மும்பை போன்ற இடங்களில் இதேபோல பாதி துறைமுகம் கடலில்தான் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க எந்த பாதிப்பும் ஏற்படாது.

சென்னை, தூத்துக்குடி, எண்ணூர், கொச்சி ஆகிய துறைமுகங்கள் அருகில் மீனவர்கள் எந்தபாதிப்பும் இன்றி மீன்பிடித்து வருகிறார்கள்.

இங்கு துறைமுகம் வந்தால் முதலில் நன்மை அடையபோவது மீனவர்கள் தான். அவர்கள் பிடிக்கும் மீன்களை இங்கிருந்து ஏற்றுமதிசெய்யலாம்.

நீரோடி முதல் குளச்சல் வரை கடற்கரை கிராமங்கள் அழிந்துவிடும் என்று புரளியை கிளப்பி விட்டு உள்ளனர். இதையாரும் நம்ப வேண்டாம். இது வீண் புரளிதான். அரசியல் நோக்கத்திற்காக சிலர் இப்படி செய்கிறார்கள்.

2017-ம் ஆண்டு துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டால் 2020-ம் ஆண்டு முதல் கப்பல் குளச்சல் துறை முகத்தில் இருந்து புறப்படும். 10- ஆண்டுகளில் குமரிமாவட்டம் சிங்கப்பூருக்கு நிகராக மாறும்.

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பழைய உச்சிக் கடை- கன்னியாகுமரி சாலை பணிக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கடை- தோட்டியோடு சாலைக்கு ரூ.23 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது.

மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் 2 மேம்பாலங்கள் அமைக்க ரூ.300கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குமரிமாவட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூ.100 கோடியில் நடந்துவருகிறது.

குமரி மாவட்டத்தில் தொழிலாளர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு இடம் தேர்வுசெய்யப்பட்டு ரூ.106 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை ரெயில்பாதைக்கு ரூ.3 ஆயிரத்து 400 கோடி ஒதுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

4 வழிச்சாலை பணிக்கு 2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் விமானம் நிலையம் அமைக்கவும் முயற்சி நடந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...