ஒட்டச் சுரண்டப்பட்டு, மூளியாய் நிற்கிறது தமிழ்நாடு

பிரச்சினை முற்றுவதற்குள் கர்நாடக மாநில அரசு அரைமனதுடன் காவிரி நீரைத் திறந்து விட்டிருக்கிறது. என் தலைமுறையில் நான் கண்ட எந்தப் திராவிடப் புண்ணாக்குத் தலைவனுக்கோ அல்லது தலைவிக்கோ இந்தப் பிரச்சினையை சுமுகமாக முடித்து வைக்கும் அக்கறை இருந்ததில்லை. பிரச்சினையைத் தூண்டிவிட்டுக் குளிர்காயவே முயன்றிருக்கிறார்கள். இதுமாதிரியான வாழ்வாதாரப் பிரச்சினையில் கோர்ட்டும், கேசும் இரு மாநிலங்களுக்கு இடையேயும் தீராத கசப்பையே ஏற்படுத்தும். தொலை நோக்குப் பார்வையுடைய பேச்சுவார்த்தைதான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். ஆனால் அதற்குரிய பக்குவமும், முனைப்பும் உடைய தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் வருத்தம்.

புர்ச்சித் தலைவியெல்லாம் கடவுளுக்கு அடுத்த மாதிரி. பேச்சாவது? வார்த்தையாவது?! ரவுண்டு கட்டி ஒரு ஆட்டம் ஆடினால் நம்மால் தாங்க முடியுமா என்ன? முத்தமிழ் வித்தவரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அந்த ஆள் வாயைத் திறந்தாலேயே உள்ளது போய் நொள்ளையாகி விடும் என்பதுதானே கடந்தகால வரலாறு?

இன்னமும் வயலை பிளாட் போட்டு விற்காமலிருக்கும் தஞ்சை விவசாயி கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்வானோ என்னவோ? அதேசமயம் ஆற்றில் தண்ணீர் வருவதை நினைத்து வருத்தப்படும் அரசியல் கிரிமினல்கள் தமிழ்நாட்டில் அதிகம்பேர் இருக்கக்கூடும். காவிரியில் தண்ணீர் வந்தால் மண் அள்ளுவது தடைபட்டுப் போகும் பாருங்கள்! காய்ந்து கிடக்கும் ஆற்றிலல்லவா இஷ்டத்துக்கும் அள்ளலாம்?

The rape and pillage of TamilNadu is total and complete. The present day TN is a man made disaster. (தமிழ்நாடு முழுமையாக சூறையாடப் பட்டுள்ளது) கடந்து ஐம்பது வருடத்தில் ஒட்டச் சுரண்டப்பட்டு, மூளியாய் நிற்கிறது தமிழ்நாடு. திரும்பி வர முடியாத நிலையைக் கூட நம் தமிழ்நாடு அடைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இந்தப் பேரழிவை சரி செய்ய இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாகலாம். அல்லது அதற்குள்ளாகவே தமிழ்நாடு ஒரு பாலைவனமாக மாறிப் போயிருக்கலாம். ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக, எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் இந்தக் கொள்ளை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

உலகில் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான, மிகவும் தேவையுள்ள ஒரு கனிமம் ஆற்று மணல்தான். It's a precious commodity. ஆற்று மணலை விற்பதன் மூலம் ஒரு சமூக அக்கறையுள்ள அரசாங்கத்திற்குப் பல இலட்சம் கோடி ரூபாய்கள் வருமானம் ஈட்டியிருக்க முடியும். அதனைக் கொண்டு அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்க முடியும். ஆனால் அப்படியா இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கிறது? அரசியல்வாதிகள் என்கிற போர்வையில் அதிகாரத்திற்கு வந்த கிரிமினல்களல்லவா அத்தனையையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்? இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டுப் பொதுமக்களும், இளைஞர்களும் சினிமாவிலும், மது போதையில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். எவனுக்கும் அக்கறையில்லை இங்கே.

ஆற்று மணலைத் திருடி மாட, மாளிகை கட்டி வாழ்கிறவனுக்கு குடிக்கிற தண்ணீர் கிடைக்காமல் போகும் நாள் தூரத்தில் இல்லை. குடி தண்ணீரைக் கூட வெளி மாநிலத்திலிருந்து காசு கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் குண்டி கழுவ தண்ணீரை எங்கிருந்து வாங்குவான்? குளிப்பதற்கும், துவைப்பதற்கும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி கட்டுபடியாகுமா என்ன?

ஒரு கைப்பிடியளவு ஆற்று மண் உருவாகுவதற்கு நூறாண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள் (Please correct me if I'm wrong). ஆற்றில் தண்ணீர் ஓடி, ஓடி பாறைகளை அரித்து, அரித்து ஆற்றுமணல் உருவாக வேண்டும். அப்படி உருவாகும் ஆற்றுமணல் ஒரு ஸ்பாஞ்ச் மாதிரியாக ஆற்றுத் தண்ணீரைப் பிடித்து வைக்கிறது. நீரோட்டமில்லாத நாளில் ஊற்றுக்கள் தோண்டி தண்ணீர் எடுப்பதெல்லாம் ஒரு காலத்தில் எளிதாக இருந்தது. இன்றைக்கு ஆற்று மணலை முழுவதும் சுரண்டியெடுத்துவிட்டு கட்டந்தரையாக்கி வைத்திருக்கிறார்கள். ஆற்றில் வரும் நீர் அப்படியே ஓடிவிடும். அதன் காரணமாக நிலத்தடி நீர் குறைந்து போய் சுற்றுப்புறம் பாலைவனமாகிவிடும் என்பதெல்லாம் மிக ஏழ்மையான நாடுகளில் வசிப்பவனுக்குக் கூடத் தெரியும். அதனால்தான் அங்கிருப்பவர்கள் ஆற்றுமணலை அள்ள விடுவதில்லை. தமிழ்நாட்டில் இதையெல்லாம் சொல்ல முடியுமா என்ன? சொன்னாலும் எவன் கேட்பான்?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...