இந்தியாவின் அருகில் உள்ள ஒருநாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதிசெய்து வருவதாக ஆசியான் மாநாட்டில் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தாக்கிப்பேசினார்.
இதேகருத்தை கிழக்கு ஆசிய மாநாட்டிலும் அவர் கூறினார்.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸாக்கு பிரதமர் நரேந்திரமோடி சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அந்நாட்டின் தலைநகர் வியன்டியானில் வியாழக்கிழமை நடைபெற்ற 14-ஆவது தென்கிழக்கு ஆசியநாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
கிழக்கு ஆசியமாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள ஒருநாடு, பயங்கரவாதத்தை உருவாக்கி, உலக நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் அமைதி குறைந்து, வன்முறை அதிகரிக்கிறது. பயங்கரவாதத்துக்கு ஆதரவுஅளித்து, அவற்றை ஏற்றுமதி செய்யும் தேசத்தைத் தனிமைப்படுத்தும் நேரம் வந்து விட்டது. பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து நாம் செயல்படக்கூடாது. மாறாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டையும் தனிமைப்படுத்த வேண்டும்.
பயங்கரவாத ஏற்றுமதி, சர்வதேச சமூகத்தின் பொதுபாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உலகின் பன்முகத் தன்மைக்கு பெரும் சவாலாக விளங்கும் பயங்கரவாதத்தை ஒடுக்க முன்வரவேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.