பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 8-ந்தேதி சரக்கு மற்றும் சேவைவரி மசோதா (ஜி.எஸ்.டி.) நிறைவேறியது. அதை தொடர்ந்து 50 சதவீத மாநிலங்களில் இந்தமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜி.எஸ்.டி. மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதைதொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து முடிவு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குழுவிற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைவராக இருப்பார். மற்றமாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பர். எந்தபொருளுக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பது குறித்து அக்குழு முடிவுசெய்து பரிந்துரை செய்யும்.
மேலும் ஜி.எஸ்.டி. குழு நடைமுறைகளுக்காக மத்திய கலால் மற்றும் சுங்கவாரியத்திற்கு நிரந்தர அழைப்பாளராக ஒரு தலைவரை சேர்க்கவும், ஜி.எஸ்.டி. குழுவிற்கு கூடுதல்செயலாளர் பதவி மற்றும் 4 கமிஷனர் பதவிகளை உருவாக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கிடையே அருண்ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. குழுவின் முதல்கூட்டம் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.