பலுசிஸ்தான் தலைவர்களுக்கு அரசியல் புகலிடம்

பாகிஸ்தானில் இருந்து விடுதலைகேட்டு போராடிவரும் பலுசிஸ்தான் தலைவர்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.   பலுசிஸ்தான் தலைவர்கள் முறைப்படி அரசியல் புகலிடம்கேட்டு விண்ணப்பித்தால் ஒருசில வாரங்களில் அவர்களுக்கு முறைப்படி புகலிடம் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
 
பலுசிஸ்தானின் முதன்மை தலைவராகவிளங்கும் பிரமாகத் புக்டி, இந்தமுடிவை வரலாற்று சிறப்புமிக்கது என்று வரவேற்றுள்ளார். கடைசியாக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய் லாமாவிற்கு இந்தியா அரசியல்புகலிடம் அளித்தது. 
 
நாடு கடத்தப்பட்டதால் வெளிநாட்டில் உள்ள தன்னைப் போன்ற பலுசிஸ்தான் தலைவர்களுக்கு போதிய பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தால் கடும்நெருக்கடி உள்ளது. இந்த தலைவர்களுக்கு அரசியல்புகலிடம் அளித்தால், இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படும் இதன் மூலம் இவர்கள் பிறநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். விரைவில் புக்டி, ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அடைக்கலம் கோருவார் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக போராட்டக்குழு நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் புக்டி, உலகில் உள்ள பலநாடுகளுக்கு சென்று பலுசிஸ்தான் பிரச்னை குறித்து எடுத்துரைக்க எளிதாக அமையும் எனக்கூறப்படுகிறது. 
 
பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தினத்தின் போது பலுசிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசியது உலகளவில் கவனத்தை ஈர்த்தது என்று தெரிவித்துள்ள புக்டி இதற்காக பிரதமருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...