உலக அதிசயங்களை தேடிசெல்லும் முன் நமது நாட்டில் உள்ள அதிசயங்களையும் ஏறெடுத்து பார்த்துவிட்டு உலக
அதிசயங்களை தேடிசெல்லவேண்டும்.அப்படி நீங்கள் தேட துவங்க ஆரம்பித்தால் உங்கள் கண்ணில் முதலில்
படுவது மாஜ்லிதீவுதான்.
வழக்கமா நான்கு புறமும் கடல் சூழ்ந்துஇருக்கும் நிலப்பரப்பினைதான் தீவு என்று சொல்கிறோம்.ஆனால் உலகிலேயே ஆற்றின் நடுவில் உள்ள ஒரு பகுதி தீவு என்று சொல்லப்படுகிறது.அதுவும் அந்தப்பகுதி இந்தியா வில் இருக்கிறது என்றால் நமக்கு சந்தோசம் தானே.. உலகின் பெரிய நதித்தீவு (RIVER ISLAND) இந்தியாவில்
தான் இருக்கிறது.
இந்தியாவில் கேரளாவை தான் நாம் கடவுளின் பூமிஎன்று சொல்லுவோம்.அப்படியென்றால் தமிழ் நாட்டில்கடவுள்
இல்லையா என்று நீங்கள் கேட்கக்கூடாது.கடவுள் அனைத்து இடத்திலும் இருக்கிறார்இருந்தாலும் இயற்கை
அன்னை தன்னுடைய அழகினை அள்ளி வீசிஇருக்கும் இடங்களில் கடவுள் கொஞ்சம் கூடுதலாகவே அங்கே தங்கி விடுவது இயற்கையே.அதனால்தான் அது கடவுளி ன் பூமி என்று சொல்லப்படுகிறது.
கேரளாவை போலவே இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் தான் அஸ்ஸாம்,இங்கும் ஒரு பகுதி கடவுளின் காலடிப்
பட்ட பகுதி என்றே சொல்லப்படுகிறதுஅது தான் மஜ்லி தீவு நான்குபுறமும் நதியால் சூழப்பட்ட உலகின் மிகப் பெரிய நதித்தீவு இதுதான்.சுமார் 1250 கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த தீவினை சுற்றி மூன்று ஆறுகள் ஓடுகின் றன . ஒன்று தீவின் வடக்கில் ஓடும் பிரம்மபுத்திரா, மற் றொன்று அதிலிருந்து பிரிந்து சென்று, மீண்டும் அதிலே யே வந்து கலக்கும் கெர்குட்டியா சுட்டி, மூன்றாவது தெற்கில் ஓடும் சுபான்சிரி ஆறு. இவற்றுக்கு நடுவில் மாஜூலி தீவு அமைந்து ள்ளது.
தொடர்ந்து பிரம்மபுத்திராவில் பெருக்கடுத்து ஓடும் வெள் ளத்தினால் மாஜ்லி தீவு சுருங்கிகொண்டே வருகிறது. தற்பொழுதுசுமார் 420 கிலோமீட்டர் பரப்பில் மட்டுமே மாஜிலி தீவு இயற்கையின் அடையாளமாக வீற்றிருக்கி றது. இருந்தாலு ம் இன்றும் 144 கிராமங்கள் இங்குள்ளது. இங்கு சுமார் இரண்டு லட்சம் மக்கள் வசித்து வருகிறார் கள்.
இயற்கைஅன்னை சீராட்டி தாலாட்டி சோறூற்றி வளர்த்து வரும்இந்த மாஜ்லி தீவும் கடவுளின் பூமிதான் என்று சொல்கிறார்கள்.அங்குள்ள மக்கள்,ஏன்என்றால் கிருஷ்ண் ணர் இங்கு தன்னுடைய நண்பர்களுடன் விளையாடி உள்ளதாக இங்கு ள்ள மக்களால் காலம் காலமாக சொல் லப்படுகிறது.
இதை மெய்ப்பிப்பது போல் இங்கு வைணவம் தான் வழிபாட்டில் உள்ளது.அதுவும் கிருஷ்ண வழிபாடே தீவு எங்கும் தென்படுகிறது.இந்தத்தீவில் சுமார் 60க்கும் மேற்பட்ட வைணவ மடங்கள் உள்ளது.இதற்கெல்லாம் காரணகர்த்தா ஸ்ரீமந்த சங்கரதேவா என்கிற மகான்.16 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்குவந்து வைணவத்தை வழி நடத்தி இங்குள்ள மக்களை கடவுளின் பிள்ளைகளாக மாற்றினார்.
இங்கிருக்கும் வைணவ மடங்களில் இன்றும் ஆயிரக்கண க்கான இளம் துறவிகள் உருவாகி இந்தியாவெங்கும் மக்களிடம்கிருஷ்ணபக்தியை பரப்பி வைணவத்தை வளமாக்கி வருகிறார்கள்.இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட ஸ்ரீமந்த சங்கரதேவாவின் ஆசியினால் இன்றும் ஒரு அற்புதம் மாஜிலி தீவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது .அதாவது ஒரு விளக்கு அணையாமல் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.
மாஜ்லி தீவின் இதயமான நாம்காரில் உள்ள வைணவ மடத்தில் ஸ்ரீமந்த சங்கரதேவாவின் முதல் குருவான மஹாதேவர் ஒரு அணையாவிளக்கினை ஏற்றியுள்ளார். 1528 ம் ஆண்டில் ஏற்றப்பட்டு இன்றுவரை 488 ஆண்டுக ளாக எரிந்துகொண்டிருக்கும் இந்த விளக்குதான் இன்றும் மாஜ்லிதீவில் மாற்றுமதங்கள் தழைக்காமல் இந்துமதத்
திற்கு ஒளியூட்டி வருகிறது.
பிரம்மபுத்திராவின் கரையில் உருவாகிய மாஜ்லி தீவுக்கு ஐநூறு வயசுக்கு மேலாகியும் இன்றும் அது வைணவத்தை வழி நடத்தி இந்துமதத்தை மற்றமதங்களின் ஆக்கிரமி ப்பில் இருந்து பாதுகாத்து வருகிறது.
பிரம்ம புத்திராவினால் உண்டாகும் வெள்ளத்தினால் நிலப்பரப்பு தொடர்ந்து சுருங்கினாலும் மாஜ்லி தீவினால் இந்துமதம்தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது என்பத ற்கு இங்கு ஒவ்வொரு வருசமும் மூன்று நாட்கள் தொட ர்ந்து நடந்து வரும் ராசலீலா என்கிற திருவிழாவில் நடைபெறும் கிருஷ்ணர் ராதையின் காதலை சித்தரிக்கும் நாடகத்தில் முகமூடிகள் அணிந்து கொண்டு இந்ததீவு மக்கள் ஆடிப்பா டுவதை காண உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மாஜ்லிதீவில் வந்து குவிகிறார் கள்.
முகமூடி என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது மாஜ்லி தீவில் முகமூடி தயாரிப்பதே ஒரு தொழிலாக கொண்டு ஒரு ஒரு கிராமமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இங்கு தயாராகும் முகமூடி உலகம் முழுவதும் செல்கிறது என்றால் மாஜ்லி தீவின் மகிமையை உணர்ந்து கொள்ள லாம்.நம்ம கமலுக்கு மாஜ்லி தீவின் முகமூடிகள் மீது
தனிக்காதலே உண்டாம்.
இயற்கை அன்னை தன்னுடைய ஒட்டுமொத்த அழகை யும் இந்த தீவிற்கு வழங்கி கடவுளின் பூமியாக விளங்கும்
மாஜ்லி தீவை அஸ்ஸாம் பிஜேபி அரசு தனிமாவட்டமாக அறிவித்துள்ளது.இதனால் மாஜ்லியில் சுற்றுலா அதிகரிக் கும் அதோடு இந்துமதமும் உலகளவில் அதிகமக்களை சென்றடையும் என்பது நமக்கு சந்தோஷம்தானே.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.