ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் சார்பிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பிலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  அண்மையில் ஜூன்மாதம் நடைபெற்ற மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலில், இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்களுக்கு சேவைசெய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்களின் குரலை இன்று உங்களிடம் கொண்டு வருகிறேன்.

உலகளாவிய எதிர்காலம் குறித்து நாம் விவாதிக்கும் போது, மனிதனை மையமாகக்கொண்ட  அணுகுமுறைக்கு நாம் உயர்  முன்னுரிமை அளிக்க வேண்டும். நீடித்த  வளர்ச்சிக்கு முன்னுரிமை  அளிக்கும் அதே வேளையில், மனித நலன், உணவு  மற்றும் சுகாதாரப்  பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் 250 மில்லியன்  மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியதன் மூலம், நிலையான  வளர்ச்சியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை நாங்கள்  நிரூபித்துள்ளோம். எங்கள் வெற்றியின் இந்த அனுபவத்தை முழு உலகளாவிய தெற்குடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

 

மனிதகுலத்தின் வெற்றி நமது கூட்டுவலிமையில் உள்ளதே தவிர, போர்க்களத்தில் அல்ல. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு, உலகஅமைப்புகளில் சீர்திருத்தங்கள்  அவசியமாகும். சீர்திருத்தம்தான் முக்கியம்! புதுதில்லி  உச்சிமாநாட்டில் ஜி20 அமைப்பில், ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினர்ஆனது,  இந்த திசையில் ஒரு முக்கியமான படியாகும். ஒருபுறம் உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவரும்  நிலையில், மறுபுறம், இணையவெளி கடல்சார் மற்றும் விண்வெளி போன்ற துறைகள் புதிய மோதல் அரங்கங்களாக உருவாகி வருகின்றன. இந்தஅனைத்து  பிரச்சனைகளிலும், உலகளாவிய நடவடிக்கை, உலகளாவிய லட்சியத்திற்கு  இணையாக இருக்கவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்!

தொழில்நுட்பத்தை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் பயன் படுத்தவும், சமச்சீரான ஒழுங்குமுறை தேவைப் படுகிறது. தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப் படுவதை உறுதிசெய்யும் உலகளாவிய டிஜிட்டல் ஆளுகை நமக்கு தேவை. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு பாலமாக இருக்க வேண்டுமே அல்லாமல், ஒரு தடையாக அல்ல! உலகளாவிய நன்மைக்காக, இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை ஒட்டுமொத்த உலகத்துடனும் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்பது ஒரு உறுதிப்பாடு. “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்“, “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு” போன்ற நமது முன்முயற்சிகளிலும் இந்த உறுதிப்பாடு பிரதிபலிக்கிறது. அனைத்து மனிதகுலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய செழிப்பிற்கும் இந்தியா சிந்தனை, சொல் மற்றும் செயலில் தொடர்ந்து பணியாற்றும்.

ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...