தூய்மை இந்தியா இலக்கை பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மூலம் மட்டும் எட்டமுடியாது.ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சத்தியா கிரகத்தை மகாத்மா காந்தி தொடங்கி வைத்தார். அதில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். தற்போது , அசுத்தத்திலிருந்து இந்தியா விடுதலை பெற, 'ஸ்வாச்சகிரகம்' தேவை. கழிவு மற்றும் குப்பைக்கு எதிரான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியால் மட்டும் அந்த இலக்கை எட்டமுடியாது.
இந்த திட்டம் வெற்றி பெறும். பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை, துாய்மையை கடைபிடிக்கும் பழக்கம் வர வேண்டும்; குப்பையை செல்வமாக மாற்றவேண்டும். குப்பையையும், கழிவு பொருட்களையும், மறுசுழற்சி முறையில், மீண்டும் பயன் படுத்துவதன் மூலம், மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். இதற்காகத் தான், குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை வாங்க, அரசு முடிவுசெய்துள்ளது. சொந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்போர், பொதுசொத்தை சேதப்படுத்து வதை, வழக்கமாக கொண்டுள்ளனர்.
தம் பழைய இரு சக்கர வாகனத்தை, தினமும் துடைத்து, சுத்தமாக வைத்திருப்போர்,அரசு பஸ்களில் பயணம் செய்யும்போது, 'சீட்'களை கிழிக்கின்றனர்; கிழிப்பவர்களை தடுப்பதும் இல்லை. அரசுபஸ்கள், தமக்கு சொந்தமானது என்பதை, மக்கள் உணரவேண்டும்.
சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் இன்னும் சிலஇடங்களிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைவிட தற்போது சுத்தம்தொடர்பான விழிப்புணர்வு பரவிவருவது முக்கியமானது. சுத்தமான இந்தியா இயக்கத்ைத தொடங்கியபின் சாலைகளில் கிடக்கும் குப்பைகளை பார்க்கும்போது என்னிடம் பல்வேறு கேள்விகள் எழும். ஆனால் விழிப்புணர்வு பற்றிய சந்தேகம் இல்லை. அது வரவேற்கப்படும் விதத்தில் தற்போது பரவிஉள்ளது. சுத்தம் தெய்வபக்திக்கு சமமானது. மத வழிபாட்டு தலங்களில் சேமிக்கப்படும் கழிவுகளை உரமாக மாற்றவேண்டும். சுத்தமாக இருக்கும் பழக்கத்தை மக்கள் இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அரசியல் வாதிகளுக்கும் சுத்தம்தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.
ஏனெனில் எப்படியும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டில் எங்கேயாவது ஒருஇடத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டேவருகிறது. எனவே அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் அடுத்ததேர்தல் குறித்துதான் கவனம் செலுத்த வேண்டியது உள்ளது. எனவே குப்பைகளை மறுசுழற்சி முறையில் பயனுள்ளதாக மாற்றும் திட்டம் கொண்டுவரவேண்டும். பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மூலம் இந்தியாவை சுத்தமாக்க முடியாது. மக்கள் இயக்கமாக மாறினால் சுத்தமான இந்தியா என்ற இலக்கை அடையமுடியும். அதற்கு மறு பயன்பாடு, மறுசுழற்சியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும்.
பஸ்களில் செல்லும் போது பெரும்பாலான மக்கள் கைவிரல் மூலம் இருக்கைகளில் துளைபோடுகிறார்கள். இது அவர்களது சொத்து என்பதை உண வேண்டும். இளம்வயதில் இருந்தே திறந்த வெளி கழிப்பிடங்களை புறக்கணிக்க வேண்டும்.
'இண்டோசன்' எனப்படும், இந்திய துப்புரவு மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியது:
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.