ஜிஎஸ்டி. வரி, வளர்ச்சிக்கு மேலும் வழிவகுக்கும்

பன்னாட்டு நிதியம் மற்றும் உலகவங்கியின் வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்பதற்காக, மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஈரான், வங்காள தேசம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளின் நிதிமந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், நேற்று அவர் வாஷிங்டனில் இந்திய பத்திரிகை யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் 7.6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பன்னாட்டு நிதி யமும், உலக வங்கியும் கணித்துள்ளன. நாம் உலகின் மையஸ்தானத்துக்கு வந்துள்ளோம். எதிர்மறையான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படவேண்டும் என்ற ஆர்வம் நமக்கு உள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நாம் சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆனால், இதுபோதாது. இன்னும் சிறப்பாக செயல்பட நம்மால் முடியும். அடுத்துவரும் ஆண்டுகளுக்கு நாம் திட்டமிட்டுள்ள முதலீடுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது, நமது பொருளாதார வளர்ச்சி கீழே இறங்காது. மற்றநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா வேகமாக முன்னேறி வருவதால், நமக்கு அன்னியநேரடி முதலீடு அதிகமாக கிடைக்கிறது.

ஜிஎஸ்டி. வரி, வளர்ச்சிக்கு மேலும் வழிவகுக்கும். அது மிகவும் திறமையானவரி. வர்த்தகத்தை எளிமை ஆக்கும். சேவைகளையும், சரக்கு போக்குவரத்தையும் எளிமை ஆக்கும். நாட்டின் ஓரிடத்தில்இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான நேரத்தை மிச்சப்படுத்தும்.

ஜி.எஸ்.டி. வரிவிகிதம் எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து இம்மாதம் 18, 19 மற்றும் 20-ந் தேதிகளில் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.

ஜி.எஸ்.டி. வரியை ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதுகடுமையான இலக்குதான். இருப்பினும், இலக்கை எட்டிவிட முடியும் என்று நம்புகிறோம் இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...