வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ”அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன். அப்போது, இந்ததிட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வோம்,” என, குறிப்பிட்டார்.
இந்நிலையில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் என்றதிட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.இதைத்தொடர்ந்து, வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் திட்டம், கடந்த ஜன., 7ல் துவக்கப்பட்டது. நாடுமுழுதும், 329 மாவட்டங்களில், 500 வட்டாரங்களில் இது செயல்படுத்தப்படுகிறது.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், இந்த வட்டாரங்களில் அரசு மற்றும் பொது சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
இந்ததிட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களின் பஞ்சாயத்து தலைவர்கள், அதிகாரிகள் உட்பட, 1,000த்துக்கும் மேற்பட்டோருடன், ‘வீடியோகான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
நாடு முழுதும், 112 மாவட்டங்களில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுத்த பட்டது. இதனால், 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந் துள்ளனர். தற்போது இந்த மாவட்டங்கள், உத்வேகம் அளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன.
இந்த வகையில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள்திட்டம், 500 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த ஓர் ஆண்டுக்குள், 100 வட்டாரங்களாவது, உத்வேகம் அளிக்கும்வட்டாரங்களாக மாற வேண்டும்.
அடுத்த ஆண்டு அக்., நவம்பரில் மீண்டும் நாம் ஆய்வுசெய்வோம். அப்போது, நான் மீண்டும் வந்து உங்களுடன் பேசுவேன். என்னைப்போல ஒரு சிலருக்கே, ஆட்சியை நீண்ட காலம் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
என் அனுபவத்தில், பட்ஜெட் ஒதுக்கீட்டால் மட்டுமே ஒருதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாது. அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து, அனைவரும் இணைந்து செயல் பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |