தசரா நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான ராவணனை, ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது.
நவராத்திரி விழா நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராவணனை, ராமர் வதம்செய்யும் தசரா நிகழ்ச்சிகள் வடமாநிலங்களில் கோலாகலமாக நடந்தது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தவிழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத்துணை தலைவர் அமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் ராவணனை, ராமர் வதம்செய்யும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராமர்வேடமிட்டு வந்தவருக்கு பிரதமர் குங்குமம் திலகமிட்டு வாழ்த்தினார். பின்னர் ராவணன் உருவபொம்மை மீது அம்பு எய்தி தசரா நிறைவு நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் ராவணனை, ராமர் வதம்செய்யும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இதேபோல் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த தசராவிழாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராவணன் மீது, ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.