ஒரு தேசம் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் கடந்த கால அனுபவம்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
கடந்த கால அனுபவம் நமக்கு சொல்வது என்ன ?
நாம் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று 65 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம்.இந்த் நிலையில் நாம் பெற்ற சுதந்திரம் பூரணம்மான சுதந்திரமா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்?
நமது சுதந்திர போராட்ட முன்னனி வீரர்கள் சொன்னது ஒன்று. நடந்தது வேறு ஒன்று.
" என் பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் என்ற நாடு உருவாகும்"
" இருதேச சித்தாந்தம் என்பது அசாத்யம்மானது.இறைவனின்
விருப்பத்தை யாராலும் மாற்ற முடியாது "
" பாரதத்தை வெட்டிப்பிளப்பதற்க்கு முன் என்னை வெட்டி துண்டாடுங்கள் "
இப்படியெல்லாம் சொன்னது நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்கள்.
ஆனால் நடந்தது என்ன? காந்தி உயிருடன் இருக்கும்போதே,அவர்தம் கண் முன்பே இந்தியா துண்டாடப்பட்டது.பாகிஸ்தான் என்ற தேசம் உருவானது.இந்த தேச சிதறல் எப்படி சாத்தியம்மானது.
முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை வைக்கும்போதெல்லாம் அதை மறுத்து வந்துடன்,இது ஒரு அப்பட்டம்மான அபத்தம் என்று சொன்ன நேரு துண்டாடப்பட்ட இந்தியாவின் முதல் பிரதம மந்திரி.
நிலவியல்ரீதியாகவும், பூகோளரீதியாகவும்,வரலாற்றுரீதியாகவும்,
சமூகம், பொருளாதாரம், என்று எந்த அடிப்படையிலும் பாகிஸ்தான் என்ற தேசம் பிரிவது சாத்தியம்மற்றது என்று வீராவேசம் பேசியவர்தான் துண்டாடப்பட்ட இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஆவார்.
இப்படி நமது சுதந்திர போராட்ட முன்னனி வீரர்கள் மக்களுக்கு தெரிவித்த நப்பிக்கை தகர்ந்தது எப்படி?
இந்தியா துண்டாடப்பட்டதின் பின்ணணி பாகம் 1
நன்றி தங்கராஜ் தொடரும்,,,,,,,,,,,,,
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.