பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அரசுசார்ந்த கட்டணங்களுக்கு பழைய 500, 1000 நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை பயன் படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்தியஅரசின் திடீர் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளில் நடைபெறும் பணபரிமாற்றம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை மந்திரி வெங்கையா நாயுடு, மின்சாரம் மற்றும் நிலக்கரிதுறை மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் நிதி அமைச்சக துறையின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது பிரதமர் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இந்தகூட்டத்துக்கு பின்னர் 14-ம் தேதிக்கு பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளை பயன் படுத்த முடியாது என மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்புக்கான கெடு இன்று (14-ம் தேதி) முடிவடைய இருந்தநிலையில் இந்த காலக்கெடு மேலும் பத்து நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நற்செய்தியாக அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.