கருப்புபணத்துக்கு எதிரான சிலுவைப் போரில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
‘ரூ.1,000, ரூ.500 நோட்டுகள்செல்லாது’ என அதிரடியாக அறிவிக்கப்பட்டு நாடுமுழுவதும் ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிற நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
அடுத்த நிதி ஆண்டு முதல் (2017 ஏப்ரல் 1–ந் தேதி) ஒரே விதமான மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைவரியை அமல்படுத்துவதற்கு, சி.ஜி.எஸ்.டி. என்னும் மத்திய சரக்கு மற்றும் சேவைகள்வரி மற்றும் ஐ.ஜி.எஸ்.டி. என்னும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள்வரி மசோதாக்களை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக மத்திய அரசு, டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது.
இந்தகூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பாராளுமன்ற விவகாரங்கள் மந்திரி அனந்தகுமார், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது அவர் பாராளுமன்றத்துக்கும், சட்ட சபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களின் செலவை அரசாங்கமே ஏற்பதுகுறித்து கட்சிகள் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
‘‘எல்லா பிரச்சினைகளையும் விவாதிக்க விரும்புவதோடு, எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசு விரும்புகிறது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியதுடன், அந்த கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமான பலன்களை தந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து பேசும் போது, ‘‘ஊழலுக்கும், கருப்புபணத்துக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பின்னால் உள்ள கள்ள நோட்டுகளுக்கும் எதிராக ஒரு சிலுவைப் போரை தொடங்கி இருக்கிறோம். நாட்டுநலனை கருத்தில்கொண்டு, இந்த பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்’’ என அழைப்பு விடுத்தார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.