ரூபாய் நோட்டுசெல்லாது என்ற அறிவிப்பு மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருப்பதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் 16ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த 6 நாட்களாக முடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று ராஜ்ய சபாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது ரூபாய் நோட்டு குறித்த விவாதம் நடைபெற்றது. என்றாலும் லோக் சபா 7வது நாளாக இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரூபாய்நோட்டு செல்லாது நடவடிக்கையில் மத்திய அரசு சரியானபாதையில் பயணித்து கொண்டிருக்கிறது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை முட்டாள்தனம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறதா என்றும் 2ஜி பிரச்சனையும் இதுவும் ஒன்று என்று எதிர்க்கட்சியினர் கருதுகிறார்களா என்றும் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் ஜெட்லி குற்றம் சாட்டினார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.