உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க் கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது என்று பாஜக தேசியதலைவர் அமித்ஷா தெரிவித்தார். பெங்களூரு, அரண்மனை மைதானத்தில், பாஜ.வின் பிற்படுத்தப் பட்டோர் பிரிவுசார்பில் சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டை தொடங்கிவைத்து அமித்ஷா பேசியதாவது: சர்வதேச அளவில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல், நாட்டில் கனிம வளங்கள் குவிந்துள்ளன. ஆனால், பல ஆண்டுகள் நாட்டை ஆண்டவர்கள், கனிமவளங்களைக் கொண்டு அரசு கஜானாவை நிரப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வில்லை. மாறாக, தங்களின் சொந்த கஜானாவை நிரப்பிக் கொண்டனர். பலமாநிலங்களில் இதே நிலை நீடித்தது.
நாட்டு மக்கள் வளர்ச்சி காணமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மக்களின் நலன்காக்கவும், நாடு வளர்ச்சிகாணவும், அதிரடியாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இதனால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது. அவர்கள் பிரதமரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றம், மாநிலங்களவையில் கூச்சல்குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். கருப்புபண ஒழிப்பு விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு தவறான வழியை காட்டி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுவரும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.