ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கலைந்தது

சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்துவதில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக தில்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கலைந்தது.

நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த விஷயத்தில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக மாநிலபிரதிநிதிகள் கொண்ட  ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் அமைந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு, மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் பெறப் படுகின்றன.

இதில் கிடைக்கும் ஆலோசனைகளை உள்ளடக்கிசட்டத்தில் திருத்தம்செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.  அந்தவகையில் ஜி.எஸ்.டி. கவுன்சில்கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில அரசுகளின் கருத்துக்களும் பெறப்பட்ட பின்னர் அடுத்தகூட்டம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் நிதியமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் , “ஜி.எஸ்.டி. க்கான வரைவுசட்டங்கள் குறித்து இன்றைய கூட்டடத்திலும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு மேலும் சிறிதுகாலம் ஆகும். எனவே மீண்டும் டிசம்பர் 11 மற்றும் 12ல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடஉள்ளது இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...