ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது

ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியத்தின் (CBIC) தரவுகளின்படி, ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு, மாவு, அழகுசாதனப் பொருட்கள், தொலைக் காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பெரும்பாலான வீட்டுஉபயோகப் பொருட்களின் விலை குறைந்திருப்பதாக பத்திரிகை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டிருந்தது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை 2017, ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தநிலையில் சுமார் 7 ஆண்டுகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்திருப்பதாக அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ள பிரதமர் மோடி, “எங்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தங்கள் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்கான ஒருவழியாகும். ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு, வீட்டு உபயோகப்பொருட்கள் மிகவும் மலிவாகிவிட்டன. இதன்மூலம் ஏழை மற்றும் எளியமக்களுக்கு கணிசமான சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான இந்தசீர்திருத்தப் பயணத்தைத்தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியத்தின் (CBIC) தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஜிஎஸ்டிக்கு முன் (உலர்) மாவுக்கு 3.5% வரி இருந்ததாகவும், தற்போது அதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அழகுசாதன பொருட்களுக்கு முன்புஇருந்த 28% வரி தற்போது 18% ஆக குறைக்கப் பட்டுள்ளதாகவும், தேனுக்கு முன்பு இருந்த 6% வரிக்கு தற்போது விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாகவும், மொபைல் போன்களுக்கு 31.3% ஆக இருந்தவரி தற்போது 18% ஆக குறைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது.

இதேபோல், தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு முன்பு 31.3% வரி விதிக்கப் பட்டதாகவும், ஜிஎஸ்டியில் அது 18% ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், தேங்காய் எண்ணெய், சோப், டூத் பேஸ்ட் ஆகியவற்றுக்கு முன்பு 27% வரி விதிக்கப்பட்ட நிலையில் அதுதற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், எல்பிஜி ஸ்டவ்-க்கு முன்பு 21% வரி இருந்த நிலையில் தற்போது அது 18% ஆக குறைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும் தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி ...

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு நாளை (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்� ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான� ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என மத்திய ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ள� ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது: அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் ''இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது'' என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப� ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...