பணமதிப்பு நீக்க விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் எதிர்க் கட்சிகள் செய்வது ஜனநாயக விரோதம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, “பதற்றத்தையும் சமூகமோதலையும் ஏற்படுத்தும் அரசின் பல்வேறு முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த பலபத்தாண்டுகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பண மதிப்பு நீக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான ஒரு நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தை எதிர்க் கட்சிகள் முடக்கியுள்ளன.
ரொக்கப் பரிமாற்றம் குறைந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாடுசெல்கிறது. இதுதொடர்பாக மக்களிடம் எம்.பி.க்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது மற்றும் வாக்காளர் பட்டியல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோல் இது அமையவேண்டும். முக்கிய சீர்திருத்த நடவடிக்கையான பணமதிப்பு நீக்கத்துக்கு மக்களின் ஆதரவு உள்ளது. ஆனால் சில எதிர்க்கட்சிகள் ஜனநாயக விரோதமாக செயல் படுகின்றன. பண மதிப்பு நீக்க விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்” என்றார்.
பண மதிப்பு நீக்கவிவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கண்டித்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற எதிர்க் கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது. மேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்மொழிந்த இத்தீர்மானத்தை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வழிமொழிந்தார்.
இக்கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் அனந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிவருகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தகுந்தது அல்ல. அரசியல் உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்கின்றனர்” என்றார்.
ரொக்கப் பரிமாற்றம் குறைந்த மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி பெட்ரோலியஅமைச்சகம் மேற்கொண்டு வரும்பணிகள் குறித்து அத்துறையின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் இக்கூட்டத்தில் விளக்கினார்.
கோவாவில் மொத்த பரிவர்த்தனையில் 60 சதவீதம் அளவுக்கு ரொக்கமில்லா பரிமாற்றத்தை உறுதிசெய்யும் வகையில் அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் பணிகளை பாதுகாப்பு அமைச்சர் மனோகர்பாரிக்கர் விளக்கினார்.
இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசியல் விமர்சகர் சோ ராமசாமி, முன்னாள் ஆளுநர் பாய் மகாவீர் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல்தெரிவிக்கப்பட்டது
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.