ஹவோலாக் தீவுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அந்தமான், நிகோபார் தீவுகளில் நீல், ஹேவ்லாக் ஆகிய இருஇடங்களும் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரிகள் ஆகும். இங்கு உள்நாட்டில்இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் வந்து குவிகின்றனர்.இந்நிலையில் அந்தமானில் வங்ககடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயல்சின்னமாக மாறுகிற அபாயம் உள்ளது. இதையொட்டி மழை பெய்து வருகிறது. காற்றும் வேகமாக வீசி வருகிறது. இதன்காரணமாக நீல், ஹேவ்லாக் பகுதிகளில் முகாமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தவித்தனர். அவர்கள் எப்படி திரும்பிச் செல்வது என திகைத்து நின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிவில்நிர்வாகம் அவர்களை பத்திரமாக மீட்குமாறு அந்தமான், நிகோபார் டிரை சர்வீஸ் கமாண்ட் படைப் பிரிவை கேட்டுக்கொண்டது. அதைத்தொடர்ந்து அவர்களை மீட்பதற்கான பணியை படையினர் நேற்று தொடங்கினர். ஹேவ்லாக்கில் இருந்து சுமார் 1100 சுற்றுலா பயணிகளும், நீல்தீவில் இருந்து சுமார் 400 பயணிகளும் மீட்கப்பட வேண்டும். மீட்கசென்ற கப்பல்கள் புயல் காரணமாக நங்கூரம் பாய்ச்ச முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 1400 சுற்றுலாப்பயணிகளையும் மீட்கும்பணி நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜ்நாத்சிங் கூறியிருப்பதாவது:- புயல் தீவிரம் குறைந்தும் அரசு உடனடியாக மீட்புபணிகளை துவங்கும். போர்ட் பிளேரில் குழுக்கள் தயாராக உள்ளது. புயலில் சிக்கியுள்ள பயணிகளின் குடும்பத்தினர் பீதி அடைய வேண்டாம். மீட்பு பணிகள் தொடர்பாக அந்தமான் ஆளுநரிடம் பேசியுள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.