துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமித் ஷா ஆய்வு

புதுதில்லியில் இன்று (13.07.2024) நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், “துடிப்பான கிராமங்கள்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு செய்தார். கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, எல்லையோர கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதிபூண்டு செயல்படுகிறது என்று தெரிவித்தார். எல்லையோர கிராமங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் கிராமங்களுடனான தொடர்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமித் ஷா வலியுறுத்தினார்.

எல்லைப் பகுதி கிராமங்களைச் சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுதக்காவல் படைகளும் (சிஏபிஎஃப்)  ராணுவமும், கூட்டுறவு அமைப்புகள் மூலம் உள்ளூர் விவசாயப்பொருட்களையும் கைவினைப்பொருட்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  ராணுவமும் ஆயுதப்படைகளும், அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில்  சுகாதார வசதிகள் தொடர்ந்து கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இப்பகுதிகளில் சூரிய சக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் எல்லையோர கிராமங்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ள மூத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைத் தொடருமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். எல்லையோர கிராமங்களில் இதுவரை 6000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றில் சுமார் 4000 சேவை வழங்கல் தொடர்பான நிகழ்ச்சிகள் எனவும் மற்றவை விழிப்புணர்வு முகாம்கள் எனவும் அவர் கூறினார். இந்த கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க 600-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அமைச்சர அமித் ஷா சுட்டிக் காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறைச்செயலாளர், இந்தோ திபெத் எல்லை காவல்படையின் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

‘துடிப்பான கிராமங்கள்’ திட்டத்தின் கீழ், 136 எல்லையோர கிராமங்களுக்கு 2,420 கோடி ரூபாய் செலவில் 113 சாலைத் திட்டங்கள் மூலம் போக்குவரத்து இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் 4 ஜி இணைப்பு விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2024 க்குள், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிராமங்களும் 4 ஜி இணைப்பு வரங்கப்படும். இந்தத் திட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிதி உள்ளடக்கத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய அஞ்சலக வங்கி சேவை வசதிகளும் இக்கிராமங்களில் செய்து தரப்படுகின்றன.

இந்த துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் வளர்ச்சியை அதிகரிக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில், சுற்றுலா அமைச்சகத்துடன் ஒருங்கணைந்து உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்த முக்கியமான  லட்சிய திட்டம் 14 பிப்ரவரி 2023 அன்று ரூ.4800 கோடி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...