என்னமோ இதெல்லாம் புதுசா நடப்பது போல ஏன் இத்தனை அக்கப்போர்? இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் இது சகஜமே!
இந்திய அரசியலில் நேருவின் ஆளுமை நேதாஜிக்கு செய்த துரோகத்தின் மூலமே துவங்கியது. நேருவுக்குப் பின் இந்திரா என்பதும் அதே போன்றதொரு நிகழ்வே… அத்தருணத்தில் காங்கிரஸ் கட்சியில் பல அனுபவசாலிகள் இருக்க அவர்களை புறந் தள்ளியே அந்த நிகழ்வும் நடந்தேறியதும், அதன் பிறகு அவர் மகன் ராஜீவ், அவரது மனைவி சோனியா, அவர்களின் புதல்வர் ராகுல் என திறமை அனுபவம் போன்ற காரணிகள் கவனிக்கப்படாது வாரிசு, அனுதாபம், உணர்வுப்பூர்வ அரசியல் என்றே மக்களிடம் திணிக்கப்பட்டு வாரிசு அரசியல் மக்களிடையே சகஜமாக்கப்பட்டது.
இதன் நீட்சி தமிழகத்திலும் நடந்தேறியது. அண்ணாத்துரைக்குப் பிறகு நாவலர் என்பது தகர்க்கப்பட்டு எம்ஜிஆர் ஆதரவுடன் கலைஞரின் கைவசம் திமுக வந்ததும் துரோக குயுக்தி அரசியல் மூலமே! கலைஞரின் மகன்கள், மகள், பேரன் போன்ற பலர் கட்சி அதிகாரத்தில் கோலாச்சுவதும் அதே அடிப்படையிலேயே !
அதிமுகவில் எம்ஜி ஆரின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி ஜானகி அம்மா தானே முதல்வர் ஆனார். அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அம்மா முன்னிறுத்தப்பட்டு தனி அணியாக கட்சின் பல தலைவர்கள் அவர் பின் சென்றது பின் கட்சி அவர் வசம் வந்தது என எல்லாம் மக்கள் கருத்தறிந்தா?
தமிழக கட்சிகளைப் பொறுத்தவரை திறமை, அனுபவம், படிப்பு போன்ற காரணிகள் அரசியல் தலைமையை நிர்ணயிப்பதில்லை. ஒட்டு மொத்த மாநிலமறிந்த முகம், சினிமா பரிச்சயம் போன்றவையே தகுதிகளாக இருக்கிறது.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.