தேசீய கீதம் எழுந்து நிற்போம்! – சேர்ந்து பாடுவோம்!! மரியாதை செய்வோம்

கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதாப் ராவ் அடங்கிய பெஞ்ச், ஷீயாம் நாராயண் செளக்கோ மற்றும் இந்தியா  யூனியன் வழக்கில், இனி திரையரங்குகளில் தேசீய கீதம் இசைக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருக்கிறது!
 
இத்தீர்ப்புக்கு பெரும் ஆதரவு ஒருபுறமும், எப்போதும் போல ஒரு குரூப் எதிர்த்தும், அறிக்கை, விவாதங்கள் நடத்திய வண்ணம் இருக்கின்றனர்!
 
ஆதரவு தெரிவிப்போரை விட்டுவிடுவோம்!
 
எதிர்ப்பாளர்கள் சொல்வதெல்லாம் இது தான்
 
1. தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றால்தான் தேச பக்த்தியா.
 
2. பாடல் இசைக்கப்படும் போது சேர்ந்து பாடாவிட்டால் அது தேசதுரோகமா?
 
3. பாடலில் கலந்து கொள்ளாமல், பாடும் போது எழுந்து நடந்தால் அது தேச குற்றமா?
 
4. மோடி அரசு ஏன் வேண்டாத வேலையை செய்கிறது?

 
இத்தனை நாள் எங்கேயோ கிடந்த “ஜனகன மண” வை தியேட்டருக்கு கொண்டு வந்து ஏன் எங்கள் “தனிமனித உரிமையை” பறிக்கிறார்கள். என் கிறார்கள்
 
முதலில் இவர்களுக்கு புரியும் படியான ஒரே ஒரு உதாரணத்தை சொல்லி விடுகிறேன்.
 
நவம்பர் மாதம் 10-ந்தேதி அமெரிக்க மாகாணமான மாசசெஸ்ட், கல்லூரி  ஒன்றில் தேர்தல் தகராரில் அமெரிக்காவின் தேசிய கொடி எரிக்கப்பட்டது!

 
இதற்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட டோனால்ட் டிரம்ப், தேசீயக் கொடியை எரித்தால் குடி உரிமையை இழக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளது  பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 
டிரம்ப் கூறியது ஏன் அதிசியமானது? அமெரிக்காவில் இதுவரை தேசீயக்கொடியை எரிப்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை! அது தேசீயக் கொடியை அவமதிப்பதும் ஆகாது! அதாவது அது தனி மனித உரிமை!
 
இப்படித்தான் அமெரிக்காவின் தந்தை ஜார்ஜ் வாஷிங்டன் கூட தனிமனித உரிமைக்கு ஆதரவாககூறியுள்ளார்.

 
 
தனி மனித சுதந்திரம் என்னும் பெயரில் தேசீயக்கொடியை கூட உள்ளாடையாக, கோவணமாக கட்டிய அமெரிக்கர்கள் இன்று தேசீயகொடிக்கு ஆதரவாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஆனால், லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி காலத்தில் திரையரங்குகளில் தேசீய கீதம் பாடப்பட்டு எழுந்து நின்ற மக்கள், இன்று மோடி காலத்தில், அவர் சம்பந்தப்படாத இவ்விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்க மறுப்பது ‘விதண்டா வாதம்தானே’
 
கோர்ட் தனது தீர்ப்பில் ‘வித்ண்டாவாதிகளின் மேலே சொன்ன எல்லா சந்தேகத்துக்கும்’ விளக்கம் அளித்துள்ளது!
 
தாயை, தாய் நாட்டை, தாய் மொழியை, தாய் மதத்தை மதிக்காதவன், மனிதன் என்றால் , அதை நாம் ஏற்க வேண்டுமா?

 
நமது முன்னோர்கள் உருவாக்கிய தேசீயக் கொடி, தேசீய கீதம் இவற்றை சட்டம் போட்டுத்தான் காப்பாற்ற வேண்டும் என்பதும், தனி மனித உரிமை என்னும்ம் பெயரில் தேசிய கீதத்திற்கு நாம் மரியாதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லுவதும்,

 
இந்நாட்டின் குடிமகன் எனச்சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வேண்டும்!
 
தேசீய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்போம் – சேர்ந்து பாடுவோம் – மரியாதை செலுத்துவோம்! அதுவே இந்தியனாக இருப்பதற்கான அடிப்பபடை தகுதி!!!!

நன்றி ; எஸ். ஆர். சேகர் 

பாஜக மாநில பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...