மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது குளச்சல்துறைமுக பணிகள் மற்றும் பல்வேறு சாலைப்பணிகள் பற்றி பேசினார்கள்.
முன்னதாக விமானநிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று நாளை தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் போராடு கிறார்கள். போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக் கட்டு நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக இருப்போம். ஆனால் வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காளையை காட்சி பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சிதான் அதைசெய்தது.
தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தின் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்தமுடியவில்லை. தற்போதைய பா.ஜனதா அரசு ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்து வருகிறது.செய்த தவறுக்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை கைவிடவேண்டும். மோடி அரசு விவசாயிகளுக்கான நல்ல திட்டங்களை வகுத்துவருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.