மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடை

மத்தியப்  பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடைவிதிக்கப்படும்  என்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங்  சவுகான் அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தலைநகர் போபாலில்  குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் தேசியக்  கொடியை ஏற்றிவைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை. இவை திறந்தவெளிகளில் வீசப்படுவதால், மழைநீர் பூமிக்குள்  செல்வது தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் குறைந்துவருகிறது. மேலும், சுற்றுச் சூழலும் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் மேய்ச்சலின் போது இந்த  பாலித்தீன்பைகள் அவற்றின் வயிற்றுக்குள் சென்று விடுகின்றன. இதனால், அவை உயிரிழக்க  நேரிடுகின்றன. எனவே, பாலித்தீன் பைகளுக்கு முழு தடைவிதிக்க முடிவு செய்துள்ளோம். மத்தியப் பிரதேசம் முழுவதும் வரும் மே 1ம் தேதி முதல் பாலித்தீன்  பைகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பாலித்தீன்  உற்பத்தியாளர்கள் மாற்று தொழிலுக்கு மாறுவதற்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு சவுகான் அறிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...