உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப் பட்டது. முதல் 4 கட்டதேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 5-ம் கட்ட தேர்தலானது வரும் 27-ம் தேதி நடைபெறஉள்ளது. 52 தொகுதிகளை உள்ளடக்கிய இத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைதால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், லக்னோ அருகே உள்ள அம்பேத்கர்நகரில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த் சட்ட சபைத் தேர்தல் வெறும் அரசியல் கட்சிகளுக்கானதேர்தல் அல்ல. உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அகிலேஷ்யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு இடையே நடந்தபோரை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தல்.
60 ஆண்டுகளாக நாட்டை ஆண்டகாங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது?. ராகுல்காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இரு இளவரசர்களின் கதைகள் தனித்து வமானது. ஒருவர் (ராகுல்காந்தி) தனது தாயாருக்கே சரியான சவாலாக இருந்துவருகிறார். இன்னொருவர் (அகிலேஷ்) தனது தந்தையிடம் பிரச்சனை செய்தேவருகிறார். இவர்களின் பிரச்சனையால் மாநிலம் கவலை கொண்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.