ஆன்மிகமே இந்தியாவின் பலம் , அதற்கு எந்தவொரு மதத்துடனும் தொடர் பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பரமஹம்ச யோகானந்தரால் நிறுவப்பட்ட இந்தியயோகதா சத்ஸங்க மடத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் பலத்தை சிலர் மக்கள் தொகையைக் கொண்டோ, பொருளாதார வளர்ச்சியை கொண்டோ நிர்ணயிக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பலமே ஆன்மிகம் தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
சிலர் ஆன்மிகத்தை மதத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கின்றனர். உண்மையில், ஆன்மிகம் வேறு, மதம்வேறு ஆகும்.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமும், இந்தியாவின் ஆன்மிக பலத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் யோகிகளும், துறவிகளும் ஆன் மிகத்தை வளர்ச்சி யடையச் செய்தார்கள். அவர்களில் ஒருவரான பரமஹம்ச யோகானந்தர், ஆன்மிகத்தைப் பரப்ப இந்தியாவை விட்டுச் சென்றாலும் அவர் இந்தியாவுடன் எப்பொதும் ஒருபிணைப்பைக் கொண்டிருந்தார்.
ஆன்மிகம் என்பதில் யோகாசனம் என்பது இறுதிநிலை அல்ல. யோகாசனம்தான் ஆன்மிகத்தின் நுழைவு வாயில் ஆகும். ஒருவர் ஒருமுறை யோகாசனத்தில் ஆர்வம்காட்டி அந்தப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால், அவர் வாழ்வின் ஒருஅங்கமாகவே யோகாசனம் ஆகிவிடும் என்றார் மோடி.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.