ஸ்மார்ட் சிட்டிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டுவாடகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு நாடுமுழுவதும் 100 நகரங்களை தேர்வுசெய்து, அவற்றை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவரும் மத்திய அரசு, இந்த நகரங்களில் வாழும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு வீட்டுவாடகை வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக புதிய வீட்டு வாடகை கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த புதியதிட்டமானது 2017–18–ம் நிதியாண்டில் தொடங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2,713 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நேரடியாக வழங்கப்படும்
இந்த திட்டத்தின் படி நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில்வசிக்கும் ஏழைகளுக்கான வீட்டுவாடகை வவுச்சராக (பண உறுதிச் சீட்டு) நேரடியாக வழங்கப்படும். குடியிருக்கும் பகுதியின் (நகர்) வகை மற்றும் அளவை சார்ந்தும், பரவலாக இருக்கும் வாடகை மதிப்பின் அடிப்படையிலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே இந்தவாடகை வவுச்சரின் மதிப்பை தீர்மானிக்கும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் இந்தவவுச்சர்களை குடியிருப்பவர்கள், தங்கள் வீட்டு உரிமையாளரிடம் வழங்கலாம். அதை அவர் எந்த ஒரு குடிமகன் சேவைப் பிரிவிலும் கொடுத்து பணமாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த வவுச்சர் தொகையைவிட வாடகை தொகை அதிகமாக இருந்தால், மீதமுள்ள பணத்தை வீட்டு உரிமையாளருக்கு குடியிருப்போரே வழங்கவேண்டும்.
கடந்த 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி நகர்ப்புறங்களில் 27.5 சதவீத மக்கள் வாடகைவீடுகளில் வசிப்பதாக கண்டறியப்பட்டது. இந்த நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமங்களில் வந்து குடியேறிய ஏழைகளுக்கு இந்ததிட்டம் மிகவும் பயனளிக்கும் என மத்திய நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.