அரச நீதி

இன்றைக்கு மக்களாட்சியைப் பற்றியும் அதன் உட்கூறுகளைப் பற்றியும் பரக்கப் பேசுகிறோம். ஆனால் இன்றைக்கும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் மக்களாட்சி நிலவுகிறதென்று சொல்ல முடியாது. இஸ்லாமிய நாடுகள் சிலவற்றிலும் மற்றும் ஐரோக்கிய நாடுகள் சிலவற்றிலும் முடியாட்சி தான் நிலவுகிறது.

ஆனால் பண்டைக்காலத்தில் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் முடியாட்சி தான் நிலவி வந்தது. சில விலக்குள் இருந்திருக்கலாம். கிரேக்கத்தில் குடியாட்சி இருந்ததற்கான பல ஆவணங்கள், மன்னராட்சியின் கீழ் சிற்றூர்களில் மக்களாட்சி இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

மக்கள் பொற்கால ஆட்சி காணவும் மன்னனின் மனப்பாங்கு ஆதார சுதியாக இருந்தள்ளது.

வள்ளுவப் பெருந்தகை சுமார் 2040 ஆண்டுகளுக்குப் முன்பே முன் மாதிரியான நல்லாட்சி காண்பதற்கு மன்னகுக்கு பல நன்மொழிகள் இயம்பியதோடு உதவியாளர்கள், பணியாளர்கள் எம்முறையில் செயல்பட வேண்டும் என்பதை செம்மையாக விளக்குகிறார். பல கூறுகள் சாணக்கியம் மற்றும் சுக்ர நீதியின் அறிவுரைகளுக்கு இயைந்ததாகவே உள்ளது என்பது மகிழ்வான நிதர்சனமே.

முதலில் வள்ளுவர், நாடு என்பதனை விளக்குங்கால் குறையாத விளைச்சலும், அறவோரும் குற்றமில்லாத செல்வமிக்க செல்வந்தர்களும் ஒன்று சேர்ந்ததே என்பார். (குறள் எண் 731) இதில் குற்றமிலா செல்வம் உடையோர்கள் என்பது மிகப் பொருள் பொதிந்த கருத்தாகும்.

நாட்டின் பல பகுதிகளிலும் ஏரி, குளம், வாய்க்கால்கள் அமைப்பதில் மன்னர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்துள்ளார்கள். அடிப்படைக் காரணமே நீருயர வரப்புயரும், வரப்புயர நெல் உயரும், நெல் உயர கோல் உயரும், கோல் உயரக் குடி உயரும் என்பதனால் தான். இதே கருத்தை சாணக்கியர் அர்த்த சாத்திரம் பாகம் – 2, அத்தியாயம் ஒன்றில் "ஆற்றில் அணைகட்டி நீரை சேமிக்க வேண்டும். வெள்ளப் பெருக்கையோ, மழை நீரையோ சேகரிக்க நீர்த்தேக்கம் கட்ட வேண்டும்" என்பார்.

பிறகு அத்தகு சிறப்புடைய நாட்டை ஆளும் மன்னனுக்குத் தேவையான குணங்களைக் குறிக்குங்கால் அவன் படை, மக்கள், நிலையான நிதி, நல்லமைச்சு, நண்பர், அரண் நன்கு அமையப் பெற்றிருக்க வேண்மென்பார் (குறள் எண்.381) இதையே சுக்ர நீதியும், சாணக்கியமும் வேறு கோணங்களில் விரிக்கிறது. ஆனாலும் நீதிகள் ஒன்றே.
மேலும் அரசனுக்கு அச்சமற்ற தன்மை, ஈகை அரசியலறிவு, விடாமுயற்சி, விழிப்புணர்ச்சி, அரசியல் கல்வி, மனத்திண்மை, அறவழி நிற்றல், மானமுடைமை, காட்சிக்க எளியனாதல், அன்பு, நீதி காத்தல் என்பன வேண்டுமென்பார் (குறள் எண் 382-390).

சாணக்கியமும் மன்னனின் விழிப்புணர்ச்சி, திறமை, எவ்வாறு உதவியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பனப் பற்றி முதல் அத்தியாயத்தில் விவரிக்கிறார். மன்னனின் பணிக்கால அட்டவணையைக் கூறி, காட்சிக்கு எளியனாகா விடில் எதிரிகள் மிகுதியாவர் என்பார்.

சுக்ரர் தம் நீதியில் மன்னனுக்கு ஏழு குணங்கள் வேண்டுமென்பதைப் பற்றிப் பேசுவார். தன் நீதி நூல் முதல் அத்தியாயம் எட்டாம் பகுதியில் மன்னன் குடிமக்களுக்கு தந்தையாய், தாயாக, ஆசானாக, அண்ணனாக, நண்பனாக, சுற்றமாக, பொருளை வழங்குதலில் யமனாக இருக்க வேண்டுமென்பார். மேலும் புலனடக்கத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்பார்.

எட்டு வகைத் தொழில் மன்னனுக்கு உரித்தான தென்பர். தீயன அழித்தல், வறியவர்க்குத் தானமளித்தல்,. குடிகளைக் காத்தல், யாகமியற்றல், நெறிவழி பொருளீட்டல், கப்பம் பெறுதல், பகைவரை அழித்தல், நிலப்பரப்பைக் பெருக்கல் ஆகியவை. மன்னன் காமம், கோபம், லோபம், மோகம், மானம், மதம் ஆகிய குற்றங்களைத் தவிர்க்க வேண்டுமென்பார் வள்ளுவர். அரசனுக்கு முக்கியமாக கல்வி மிக அவசியமென்பதை கல்வி (391-400), கேள்வி (411-420), அறிவுடைமை (421-430) என்ற அதிகாரங்களில் அழமாகப் பேசுகிறார். மேலும் பெரியோரைக் துணைகோடல் என்ற அதிகாரத்தில் மன்னன், பெரியவர்களை அண்டி பயன் பெறுதலைப் பற்றி பேசுகிறார் (அதி.45),

இதையே சுக்ர நீதியில், "உரிய பெரியவர்களுக்கு சிறப்பீந்து அவர் புத்திமதியைக் கேட்கவில்லையெனில் இழிவு வரும்" என்றும் கூறுகிறார்.

வள்ளுவர் தனது 448 ஆம் குறளில், " குற்றம் குறைகளை அஞ்சாமல் எடுத்துரைக்கும் துணைவரின்றேல் தானே கெடுவான்" என்றும் இதே கருத்தை வேறு கோணத்தில் 449-450 குறட்பாக்களிலும் கூறுகிறார்.

சுக்ரர் தம் நீதி நூல் 27 ஆம் பகுதியில் எவன் அரசனுடைய தீய குணங்களை அவன் முன்னிலைலேயே தைரியமாகக் கூறுகிறானோ அவனே சொல்லின் செல்வன் என்பார். மேலும் 32 ஆவது பகுதியில் "அரசனது குற்றங்களையும் குறைகளையும் கண்டறிந்து தெரிவிக்க ஒரு குழு இருக்க வேண்டும்" என்றெல்லாம் கூறுவார். மேலும் துணைவர்கள் அறிவும் ஆற்றலும் உள்ளவர்களாவும் நல்ல உபதேசங்களைச் சொல்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்பார்.

வள்ளுவர், மன்னன் ஒரு செயலை காலமறிந்து செய்ய வேண்டும் என்பதனைத் தனது காலமறிதல் என்ற அதிகாரத்தின் கீழும், ஏற்ற இடம் கருதி செயல்புரிய வேண்டும் என 50ம் அதிகாரம் இடமறிதல் என்ற தலைப்பாலும், ஒருவரின் திறனறிந்தே பணியில் அமர்த்த வேண்டும் என 501, 502, 504, 506, 508-510 எனும் குறள்களில் அறிவுறுத்துகிறார். மேலும் 520 ஆம் குறளில் செயலைச் செய்பவனுடைய மனத்தில் குறை ஏற்படாவண்ணம் மன்னன் கவனித்துக் கொள்ள வேண்டுமென்பார்.

சுக்ரநீதி 10ஆம் பகுதியில் உரியவர்களுக்குப் பெருமை செய்யாத அரசனுக்குப் பழி வந்து சேரும்" என்கிறது.

செங்கோன்மை என்ற அதிகாரத்தில் மன்னன் நடுநிலை நின்று தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும், நெறிவழி நீதி செலுத்தும் மன்னனின் திருவடிகளை உலகம் தாங்குமென்றும் கொடியவர்களுக்கு கடுந்தண்டனை அளித்தலே அறமெனவும் விரிவாகச் சொல்கிறது.

சாணக்கியர், மன்னன் எப்பொழுது உத்தமனாய் விளங்க வேண்டுமென்றும் குற்றங்களுக்கேற்ப தண்டனைகள் பலவற்றை பாகம் இரண்டில் விவரிக்கிறார்.

சுக்ரர், சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கில் சாமமே சிறப்பு எனக் கூறிவிட்டு, பின் தண்டனைகளின் அவசியத்தையும், குற்றங்கள் வகைகளையும், தண்டனைகளையும் நான்காம் அத்தியாயத்தில் விரிவாக உரைக்கிறார். அனைத்தும் கொடியவர்களைத் திருத்தும் பான்மைக்காகவே செயல்படுத்தப்பட்டுள்ளது.

வள்ளுவர் ஒற்றர்களின் இன்றியமையாமையைப் பற்றி "ஒற்றாடல்" என்ற தலைப்பில் கூறியுள்ளார். சாணக்கியர் ஒற்றனைக் கண்போல் மன்னன் கருத வேண்டும். நாட்டின் நடப்புகளை விரைந்து ஒற்றர் மூலம் தெளிதல் அவசியமென்றும், சரிவர செயல்படாவிடின் வெற்றியில்லை யென்றம், சிறந்த ஒற்றனுக்குண்டான தகுதிகளையும், துறவிகளின் வேடத்தில் அரிய இடங்களிலும் உண்மை தெளிதல் அவசியமென்றும், ஓர் ஒற்றன் கொணர்ந்த செய்தியினை வேறொருவனால் சரிபார்க்க வேண்டும், ஒப்புமை காணின் அரசன் ஏற்க வேண்டுமென்றும், ஒற்றர்களுக்கு சிறப்பு ரகசியமாகச் செய்ய வேண்டுமென்றும் கூறுவார்.

சாணக்கியரின், அர்த்த சாத்திரம் – முதல் பாகம் – அத்தியாயம் 12ல் ஒற்றர்களின் "இன்றியமையாமை" விரிவாகப் பேசப்படுகிறது. இது வள்ளுவத்தைப் பிரதிபலிக்கிறது. ஒற்றனுக்கு அரசனிடம் நெருங்கிய தொடர்பு வேண்டும். பல்கலையில் திறன் பெற்றிருக்க வேண்டும். பல்கலையில் திறன் பெற்றிருக்க வேண்டும். பலவித வேடந்தரித்து ஒற்று வேலை செய்ய வேண்டும், செய்திகளை புத்த சன்யாசினி வேட, பெண் உளவாளி மூலம் குழுக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மூன்று ஒற்றர்கள் கூற்றும் சரியாக இருந்தாலே அரசன் நம்ப வேண்டும். ஊனமுற்றோர், அலிகள் இவர்களை ஒற்றுக்குப் பயன்படுத்த வேண்டும். சன்யாசிகள், காட்டுவாசிகளை இப்பணிக்குப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக மந்திரிகள், புரோகிதர்கள், மக்கள் இவர்கள் மீதும் ஒற்றர்களை ஏவ வேண்டும்.

இதையே சாணக்கியமும் விரிவாகப் பேசுகிறது. ஊன்றிக் கவனிப்பின் ஒத்தக் கருத்துக்களே மிகுதியாக இருக்கிறது. வள்ளுவர் அமைச்சரின் தகுதிகள் பற்றிப் பேசும் பொழுது அமைச்சருக்கு வேண்டிய நுண்ணறிவு, சொல்வன்மை, தூய செயல், செயல் திறன் என்பனப் பற்றி விரிவாகப் (அதிகாரம் 64-68 வரை) பேசுவார்.

சுக்ரர் தனது நீதி நூலில் இரண்டாம் அத்தியாயாம் 6 ஆ பகுதியில் மந்திரிகளை ஜாதிகளையும் குலத்தையும் மட்டும் கருதி முடிவு செய்யக் கூடாதென்பார்.

பண்டை அரசியலில் தூது தனியான இடத்தைப் பெற்றிருந்தது. ராமன், ராவணனிடம் யுத்தம் தொடங்குவதற்கு முன் அனுமனைத் தூதனப்புகிறான். முருகப் பெருமான் சூரபத்ரமனிடம் வீரபாகுத் தேவரை போருக்கு முன் தூதாக அனுப்புகிறான். மகாபாரதத்தில் போருக்கு முன் கிருஷ்ணர் தூதாக அனுப்பப்படுகிறார். சங்க காலங்களில் புலவர்கள் தூதாகச் சென்றிருக்கிறார்கள். தூதர்களுக்குத் தனித்திறம் வேண்டும். சாணக்கியத்திலும் சிறப்பாக தூது பற்றிப் பேசப்படுகிறது. வள்ளுவர் தூதுவனுக்கு நாட்டுப்பற்று, குடிப்பிறப்பு, சொல்வன்மை, நூலறிவு, தோற்றப் பொலிவு, ஆராய்ச்சித்திறன், வாதத்திறன், சொற்செட்டு, அஞ்சாமை, இடமறிந்து செயலாற்றும் திறன், உறுதிப்பாடு அனைத்தும் அடிப்படைக்குணங்களென்பார்.

இக்கட்டுரையின் நோக்கமே நமது பாரத தேசத்தின் பெரும் பேறான சுக்ரன், சாணக்கியர், வள்ளுவர் போன்றோரின் அருட்பொழிவினை பருகுதற்கு தூண்டு கோலாய் அமைய வேண்டும் என்பதே.

– என்னார்கே மூர்த்தி

One response to “அரச நீதி”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...