ஏழாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயன் இந்த தேசத்தின் நாடி நரம்பை அறிய முற்ப்பட்டான்.கடந்த காலத்தில் மொகலாய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள்தான் இந்த மக்கள்.எனவே நமது ஆட்சிக்கும் இந்த நிலை ஏற்படுவதற்க்கு முன்னரே நமது ஆட்சியை நிரந்தரம்மாக்குவதற்க்கு பல்வேறுவிதம்மான சூழ்சியை கடைபிடிக்க முடிவு செய்து அதனையே செயல்படுத்தினான்.
இராணுவ பலத்தினால் இந்த தேசத்தினை நம்மால் அடிமையாக வைத்திருக்க இயலாது என உணர்ந்த ஆங்கிலேயன் இந்த தேசத்தின் அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்க முடிவு செய்தான்.இதன் அடிப்படையில் அவன் சிந்தனையில் தோன்றியதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி.இதற்க்கு இவன் தேர்ந்தெடுத்த துறைதான் கல்வி.இந்த கல்வி திட்டத்தை வகுத்தவன் " லார்டு மெகலாயன் ".
லார்டு மெகாலாயன் தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினான்.அந்த கடிதத்தில் " நாம் நாம் ஆளுகின்ற மக்களிடையே ஒரு மொழிப்பெயர்பாளராகிய வர்க்கத்தை உருவாக்க வேண்டும்.அப்படி நம்மால் உருவாக்கப்படும் வர்க்கத்தினர் நிறத்தால் கருப்பர்கள்.ஆனால் தங்கள் ருசி,கருத்து,ஒழுக்கம்,அறிவு என மற்ற எல்லாவற்றிலும் அவர்கள் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்'.
கல்கத்தா ரெசிடென்சி,மதராஸ் ரெசிடென்சி,மும்பை ரெசிடென்சி என்று ஆங்கிலேயே கல்வி முறையை நமது நாட்டிற்க்கு கொண்டு வந்தான் ஆங்கிலேயன்.அதற்க்கு நல்ல ஆதாயமும் அவனுக்கு கிடைத்தது.இதனை தொடர்ந்து லார்டு மெகாலாயன் எழுதிய மற்றொரு கடிதத்தில்
"ஆங்கில வழி கல்வி கற்ற எந்த ஒரு ஹிந்துவும் தனது மதத்திற்க்கு விசுவாசம்மானவர்களாக இருப்பதில்லை.கடவுள் எதிர்ப்பு,கடவுள் மறுப்பு கொள்கைக்கு ஆட்பட்டுவிடுகிறார்கள்.இந்த கல்வி முறை முப்பது ஆண்டுகளுக்கு நீடித்துவிட்டால் உருவ வழிபாடு செய்யக்கூடிய யாரும் இங்கு மிஞ்ச மாட்டார்கள் ' என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டான்..
இரண்டாவது அவன் தேர்ந்தெடுத்தது "கிறிஸ்தவ மிஷினரிகள்'. கிறிஸ்தவ மிஷினரிகள் என்றைக்கும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம்மானவர்களாக இருந்தார்கள்.விதிவிலக்காக சில தேசிய கிறிஸ்தவர்களை தவிர ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்ததால் அவர்கள் யாரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க்கவில்லை.
மேலும் மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்க இந்த தேசம் ஒரு போதும் ஒரே தேசம்மாக இருந்ததில்லை.இது உருவாகிவரும் தேசம்.ஆங்கிலேயே ஆட்சி இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் ஆட்சி.ஆங்கிலேயர்கள் நம்மை மீட்க வந்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பரப்ப ஆங்கிலேயம் கற்ற வர்க்கத்தினரையும்,மிஷினரிகளையும் பயன்படுத்ததுவங்கினான் ஆங்கிலேயன்.
நமது மக்களையே நமது மக்களுக்கு எதிராக திருப்பிவிடும் பிரித்தாளும் சூழ்சியை உருவாக்கினான் ஆங்கிலேயன்.ஹிந்துவில் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் பாகுபாடுகள் உண்டு.ஹிந்துக்கள் என்றைக்கும் ஓற்றுமையாக இருந்தது கிடையாது என்பது போன்ற கற்பனை கதைகளை மக்களிடம் பரப்பி வந்தான்.ஆங்கிலேயன்.ஆனால் லட்சோபலட்சம் ஹிந்து இளைஞர்களின் சுத்ந்திர தாகத்தை ஆங்கிலேயனாலும் அவனது பிரித்தாளும் சூழ்சியினாலும் கட்டிப்படுத்தமுடியவில்லை.
இதன் தாக்கம் 1857ல் புரட்சியாக வெடித்தது.ஆங்கிலேயே அரசு ஆட்டம் கண்டது.இந்தியாவை விட்டு ஓட திட்டமிட்டான் ஆங்கிலேயன். நாம் இனி நிரந்தரம்மாக இந்தியாவில் தங்கவோ, நிம்மதியாக ஆட்சி செய்யவோ முடியாது என்பதை உணர்ந்து கொண்டான் ஆங்கிலேயன்.இதனை தொடர்ந்து தனது அடிவருடிகள் மூலம்மாக 1857 ல் நடைபெறும் போராட்டம் என்பது சிப்பாய் புரட்சி அல்ல அது சிப்பாய் கலகம் என்று தவறுதலான கருத்து பரப்பினான். நமது இளைஞ்ர்களின் போராட்டம் திட்டமிட்டரீதியில் துவக்கப்படாததால் அந்த முதல் சுத்ந்திர போராட்டம் தோல்வியில் முடிந்தது.இந்த போராட்டம் மட்டும் திட்டமிட்டு நடைபெற்று இருந்தால் 1857 லேயே நாம் சுதந்திரம் பெற்று இருப்போம்.1947 க்கு முன் சரியாக 90 ஆண்டுகளுக்கு முன்பே இது நடைபெற்று இருக்கும்.இந்த தோல்வி ஆங்கிலேயனுக்கு சாதகம்மாக முடிந்தது.இதிலிருந்து ஆங்கிலேயன் பாடம் ஒன்றை கற்றுக்கொண்டான்.அது இந்த புரட்சி என்பது முடிவல்ல துவக்கம் என்று.
.
ஓட்டுமொத்த இந்திய மக்களிடையே ஜாதி,மதம் பேதம் தாண்டி ஏற்ப்பட்ட இந்த சுதந்திர தாகத்தை தற்காலிகம்மாக தணிக்க முடியுமே தவிர நிரந்தரம்மாக தணிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தான் ஆங்கிலேயன்.இந்த சுதந்திர கனலானது மீண்டும் எப்பொழுது வேண்டும்மானாலும் வெடிக்கலாம் என்ற நிலை இருந்தது.ஆகவே புரட்சியாளர்கள் மீது தனது முழு பலத்தையும் பிரயோகித்தான் இது நிரந்தர தீர்வு அல்ல என்பதயும் உணர்ந்துகொண்ட ஆங்கிலேயன் இந்த சுத்ந்திர வேட்கை மீண்டும் வெடிக்காமல் இருக்கவும்,புரட்சியாளர்களின் கோபம் தங்கள் மீது திரும்பாமல் இருக்கவும்,தேசம்மெங்கும் பொங்கிய சுத்ந்திரம் பற்றிய விழிப்புணர்வை தணியச்செய்யவும் ஆங்கிலேயன் ஏற்ப்படுத்திய வடிகால்தான் "காங்கிரஸ்".காங்கிரஸ் உருவாக்கியவர் மற்றும்பின்னனியாளர் ஆக்டேவியம் ஹீயூம் என்ற ஆங்கிலேயன்தான்.
காங்கிரஸ் கட்சி உருவானதின் பின்னனியாளன் ஆங்கில்யன்தான் என்பதற்க்கு சான்று காங்கிரஸ் உருவாகி முதல் மாநாடு 1885 ல் மும்பையிலும்.இரண்டாவது மாநாடு கொல்கத்தாவிலும்,மூன்றாவது மா நாடு சென்னையிலும் நடைபெற்றது.அந்த மூன்று மாநாட்டிலுமே மகாண ஆங்கிலேயே கவர்னர்களே மாநாட்டிற்க்கு வந்திருந்த பிரதிநிதிகளை வாழ்த்தி பேசினார்கள்.
மும்பையில் நடந்த மாநாட்டிற்க்கு
மும்பை கவர்னரே தலைமை வகிப்பார் என்று தீர்மானித்து அதன்பின் நமது உள்நோக்கம் அம்பலம்மாகிவிடும் என உத்தேசித்து அது கைவிடப்பட்டது.இதனை வைத்தே காங்கிரஸை உருவாக்கியவன் யார் என்பதை புரிந்துகொள்ளலாம். காங்கிரஸின் அடுத்தகட்ட நிலையை பற்றி
தொடரும்,,,,,,,,,,,,,,
நன்றி தங்கராஜ்
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.