அரபுநாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்நாட்டு நிறுவனங்கள் ஊதியம் வழங்காததால் 500-க்கும் மேற்பட்ட இந்தியதொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். பக்ரைனில் உள்ள எண்ணெய் கம்பெனிகளில் கைநிறையசம்பளம் என்ற கவர்ச்சி கரமான அறிவிப்பை நம்பி ஒரு சிலகம்பெனிகளில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அங்கு சேர்ந்த ஒருசில மாதங்களுக்கு பேசப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது.
அதன் பின்னர் ஆள்குறைப்பு, போதியவருமானம் இன்மை, கச்சா எண்ணெய் விலைகுறைப்பு உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி அவர்களுக்கு உரியஊதியத்தை வழங்காமல் எண்ணெய் நிறுவனங்கள் இழுத்தடிப்பு செய்கின்றனர்.
அந்த வகையில் பல்வேறு நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்துசென்ற ஊழியர்களுக்கு கடந்த சிலமாதங்களாக எண்ணெய் ஆலை நிர்வாகத்தினர் ஊதியம் சரிவர வழங்கவில்லை. இதனால் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள்கூட கிடைக்காமல் கடும் இன்னலுக்கு ஆளாகிவருவதாகவும், உதவிகேட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்ததாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின.
இந்த தகவலை அறிந்த வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஊதியமின்றி துயரப்படும் இந்தியர்களுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்கள் விவகாரம் பக்ரைன் அரசின்கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிரச்சனைக்கு விரைந்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் இதேபோன்று சிக்கிதவித்த சுமார் 88 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.