டெல்லியில் விவசாயிகள் பிரச்சினைக்காக, சட்டையில்லாமல் கோமணத்தோடு போராடும் முழு நேர கட்டப்பஞ்சாயத்து மாஸ்டர் விவசாயி" அய்யாக்கண்ணு, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மிஞ்சும் நடிப்புடன் ஏற்ற இறக்க குரலில் வசனமும், வியட்நாம் வீடு சுந்தரத்தை மிஞ்சும் ஸ்கிரிப்டும் பாரதிராஜாவை மிஞ்சும் கிராமப்புற காட்சிகளும், உடன் பத்திரிகையாளருக்கு தீனி போடும் ‘சீன்களை’ அரங்கேற்றி மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு அமில மழை பொழிந்திருக்கிறார்.
இவைகள் எவ்வளவு உண்மையானது? மத்திய அரசு குரூரமான அரசா? மாநில அரசு பால் குடிக்கக் கூட தெரியாத பஞ்சிளம் குழந்தையா? குற்றஞ் சுமத்தும் அய்யாக்கண்ணு யார்? அவர் ஏழை விவசாயியா? அவருக்கு பின்னால் மறைந்திருக்கும் தமிழக அரசியல்வாதி யார்? இவைகளை தெரிந்து கொண்டால் தான் ‘ஜந்தர் மந்திரில் நடப்பது நாடகம்’ என்பது நமக்குப் புரியும்!
விவசாயிகள் பிரச்சினை நேற்று முளைத்ததா?
கடந்த 50 ஆண்டுகளாக, தமிழக கட்சிகள், மத்திய காங்கிரஸ் ஆட்சி, செயலற்ற தன்மை, திறனற்ற திட்டமிடல், இவைகளால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த ‘புற்றுநோய் சொத்து’ தான் விவசாயிகளின் இன்றைய நிலைக்கு காரணம்! 2லீ உ ஆண்டுகளுக்கு முன் வந்த பாஜக அரசு மீது போட்டு தப்பிக்கப் பார்க்கிறது தமிழக கட்சிகள்!
அப்படியானால் இதற்கு பாஜக அரசு காரணமில்லையா?
கோடி ரூபாய்
2014-15 35413
2015-16 42838
2016-17 46184
கடந்த 3 ஆண்டுகளாக, குறிப்பாக பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய நிதியாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது / வந்து சேர்ந்தது படிப்படியாக அதிகரித்துள்ளது.
இது மத்திய நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு சுமார் 21 சதவீதம் அதிகமானது என்பது நமக்கு பார்த்தாலே புரியும். அதாவது மத்திய பாஜக அரசு முந்தைய காங்கிரஸ் அரசு, தான் ஆட்சி செய்யாத மாநில அரசுகளை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தாமல் அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவித்து வருகிறது என்பதற்கு இதற்குமேல் சாட்சி தேவையில்லை!
தமிழ்நாட்டின் வறட்சிக்கு யார் காரணம்?
இந்த ஆண்டு மழை பொய்த்து விட்டதால் மட்டும் வந்துவிட்டதல்ல இன்றைய வறட்சி! தஞ்சை ஜில்லா பாசனம் முழுதும் காவிரி நீரையும், காவிரி, கர்னாடக மழையையுமே நம்பி இருப்பதும், கர்னாடகத்தில் மழை பெய்து கர்னாட அனைகள் நிரம்பி வழிந்தாலே, மேட்டூருக்கு தண்ணீர் கிடைப்பதும் தமிழகத்தில் கால் நூற்றாண்டாக நடந்து வரும் கொடுமை!
இதை முழுதும் தெரிந்து தமிழக திராவிட கட்சிகள் தஞ்சை ஜில்லாவில் காவிரி தண்ணீருக்கு மாற்றாக கடந்த 25 ஆண்டுகளில் என்ன திட்டங்கள் தீட்டியது? எத்தனை செக் டேம் கட்டியது! எப்போதாவது பெய்யும் மழை நீரை சேமிக்க நீர் நிலைகளை எப்போது தூர்வாரியது! தண்ணீர் கிடைக்காததால், நெல்லுக்கு மாற்றாக, குறைந்த தண்ணீர் தேவைப்படும், வேறு எந்த பயிரை தேர்வு செய்து விவசாயிகளுக்கு கொடுத்தது?
இதில் எதையும் செய்யாத தமிழக அரசு மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பிப்பது, தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா?
விவசாயிகளுக்காக தமிழக அரசு செய்தது என்ன?
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சுமார் ரூ. 1.6 லட்சம் கோடி. ஏற்கனவே தமிழக அரசு சேர்த்து வைத்துள்ள கடன் சுமார் ரூ. 3.14 லட்சம் கோடி. மத்திய அரசின் மானியம் மற்றும் வரி மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் தொகை சுமார் ரூ. 4,600 கோடி. அதாவது மாநில பட்ஜெடில் சுமார் கால்பங்கு.
2016-17 தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ். விவசாயிகளின் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 6000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்றார். 2017-18க்கான பட்ஜெட்டை சமர்ப்பித்த தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் ரூ. 7000 கோடி வழங்க முயற்சி செய்யப்படும் என அறிவித்தார். இதுவரை கடன் வழங்கப்படவில்லை என்பதே உண்மை!
ஆக பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளிடம் பணம் இல்லை! ஏற்கனவே கடனில் மூழ்கியிருக்கும் தமிழ்நாடு, மாநில அதிமுக அரசின் போலி அறிவிப்புகளால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது என்பது உண்மையாகிறது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் இப்பிரச்சினை தீர்ந்துவிடுமே? நீங்கள் ஏன் இன்னும் அமைக்கவில்லை என்பதுதான் இவர்களின் இன்றைய கடைசி கேள்வி!
பக்ரா-பியாஸ் நதி நீர் வாரியம் போல பார்லிமெண்ட் அப்ரூவலுடன் அமைப்பதே தமிழகத்திற்கு நீண்டகால பலன் தரும். அதற்கு பார்லிமெண்டின் இரு சபைகளும் ஒப்புதல் தரவேண்டும். கீழ்சபையில் பாஜக மெஜாரிட்டி ஒப்புதல் தந்துவிடும். மேல் சபையில் எதிர்கட்சி மெஜாரிட்டி ஒப்புதல் தராமல் மசோதா தோற்றுவிடும். இதற்கு தமிழகத்திலுள்ள கட்சிகள், எதிர்கட்சிகளிடம் கோரிக்கை வைத்து ஒத்துழைப்பு கொடுக்கச் சொன்னால் பாஜக மசோதாவை பார்லிமெண்டில் அறிமுகப்படுத்த தயார்!
சரி! தற்போது டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தும் தினசரி புதுப்புது சீன்களை அரங்கேற்றும் நவீன சிவாஜிகணேசன் 100 ஏக்கர் ஏழை விவசாயி அய்யாக்கண்ணு யார்? என்பதையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
தாம் உறுப்பினராக சேர்த்த விவசாயிகளின் உறுப்பினர் தொகை ரூ. 2லீ லட்சத்தை செலுத்தாததால் பாரதிய கிசான் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். சட்டம் படித்த முழுநேர கட்டை பஞ்சாயத்து விவசாயி! திமுக வழக்கறிஞர் மகன்கள் மற்றும் மருமகன்கள் மணல் கடத்தல் வியாபாரிகள்!
இந்த ‘நற்குணங்கள்’ இருந்ததால் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில், விவசாயிகள் போர்வையில் திருச்சி முறுக்கு வியாபாரிகளுடன், இவரைப் போலவே இடதுசாரி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, விவசாயமே செய்யாத பி.ஆர். பாண்டியன் போன்ற விவசாய தலைவர்களுடன் டெல்லியில் தினசரி ஒரு வேஷம் கட்டி போராடி வரும் வேஷதாரி அய்யாக்கண்ணு!
100 நாள் உண்ணாவிரத போராட்டம் என மூட்டை முடிச்சோடு டெல்லி சென்றவருக்கு ‘சகல உதவிகளும்’ செய்து அனுப்பியவர் மன்னார்குடி மாஃபியாவின் தலைவர் தான் என்பது ஊரறிந்த ரகசியம்!
இவ்வளவு பேசும் நீங்கள் உத்திரபிரதேசத்தில் விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாக அறிவித்தீர்களே! தமிழகத்திலும் அப்படி செய்ய ஏன் மறுக்கிறீர்கள் என்று சிலர் கேட்பதும் காதில் விழுகிறது!
உ.பியில் பாஜக தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது! இதற்கான நிதி ஒதுக்கீட்டை உ.பி. அரசுதான் செய்யவேண்டும்! மத்திய அரசு நிதி தராது" என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்!
தமிழக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கடனை ரத்து செய்வோம்" என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள் செய்யவேண்டியதை, பாஜக மீது தூக்கிப்போடுவது, கடைந்தெடுத்த அரசியல் மாய்மாலம்!
விவசாயிகளுக்கு மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்காக இந்த ஆண்டு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 223 கோடி. இது கடந்த ஆண்டு செலவு செய்ததைவிட 24 சதவீதம் அதிகம். இது ஒன்றே போதாதா. மத்திய பாஜக அரசின் விவசாயிகள் நண்பன் செயல்பாட்டிற்கு!
மத்திய பாஜக அரசின் மீது எல்லா பழியையும் போடுவது, தற்போது தமிழகத்து கட்சிகள் மற்றும் மீடியாக்களின் வழக்கமாகி வருகிறது!
உத்திரபிரதேசத்தில், மக்கள் நம்பிய மாநில கட்சிகள், மக்களை ஏமாற்றியதற்கு தற்போது தேர்தலில் தண்டனை தந்து விட்டார்கள்? உத்திரபிரதேச மக்கள்!
தமிழக மக்களும், அப்படி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்! தமிழக மாநில கட்சிகளுக்கு ‘தண்டனை பரிசை’ தரும் காலம் நெருங்குகிறது!
நன்றி எஸ்.ஆர்.சேகர்
பாஜக மாநில பொருளாளர்
You must be logged in to post a comment.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
what a article and who wrote this is a very balanced people in society ? first think you yourself perfect or not ? i can say one simple thing . you wrote this article to make money and 10 baap ki tu hai .stop speaking nonsense and stop supporting useless modi and tn government