பாரதீய ஜனதா செயற்குழுகூட்டம் ஒடிசா மாநிலம் புவனேசு வரத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மாநில தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் மற்றும் கட்சியின்வளர்ச்சி ஆகியவை குறித்து பேசினார்கள்.
இறுதி நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
நமது லட்சியமான வளர்ச்சியில் பெரும்சாதனையை அடைவதற்கு தயாராக, பா.ஜனதா தலைவர்களும், தொண்டர்களும் கடுமையாக உழைக்கவேண்டும்.
பா.ஜனதாவும், அதன் தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசும் பழங்குடியினர் முன்னேற்றத் துக்காக பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமுதாய மற்றும் பொருளாதார சம நிலை என்ற சாதனையை இந்தியா அடையும். மக்களுக்கு ஆதரவான, நடவடிக்கைகள் சார்ந்த அணுகு முறையாலும் சிறந்த நிர்வாகம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அனைத்துதரப்பு மக்களின் நலனுக்காகவும், எத்தகைய சுரண்டலுக்கு எதிராகவும் பாடுபட்டுவருகிறது.
முஸ்லிம் சகோதரிகளுக்கும் நீதிகிடைக்க வேண்டும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட கூடாது. முத்தலாக் பிரச்சினையால் முஸ்லிம் சமுதாயத்தில் எந்தபிளவும் ஏற்பட நாங்கள் விரும்ப வில்லை. நாங்கள் என்னசெய்ய இருக்கிறோம் என்றால், ஒருவேளை சமுதாய தீமைகள் ஏதாவது இருந்தால், அந்த சமுதாயத்தை விழிப்படையச் செய்து அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை எடுக்கவைப்போம்.
முஸ்லிம் சமுதாயத்தினர் பிற்பட்டவகுப்பினராக உள்ளனர். அவர்களில் மிகவும் விளிம்பில் இருப்பவர்களை முன்னேற்றம் அடையச்செய்வது பா.ஜ.க.,வின் கடமை. பிற்பட்ட முஸ்லிம்களுக்கு அரசியல்சாசன அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக இதர பிற்பட்டோர் தேசியகமிஷன் உருவாக்கப்பட்டது. அது தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறினாலும், மேல்சபையில் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தொடர்ந்து சிலபிரச்சினைகளை பெரிதுபடுத்தி வருகின்றன. டெல்லி தேர்தலின்போது கிறிஸ்தவ ஆலயங்கள் மீதுநடந்த தாக்குதலை பெரிதுபடுத்தின. இப்போது மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள் பிரச்சினையை கூறிவருகின்றன. மக்கள் ஏதாவது புகார் தெரிவித்தால், அதனை தொண்டர்கள் பா.ஜனதா தலைவர்கள் மூலம் எனது கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.