புத்தரின் பிறந்த நாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் 12-ம்தேதி முதல் 14-ம் தேதிவரை ஐ.நா சபையின் சர்வதேசமாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளதாக இலங்கையின் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள புத்தமதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இலங்கையில் வேசக்தினத்துக்கு பாரம்பர்ய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வேசக் தினத்தையொட்டி, சர்வதேசமாநாடு நடத்த ஐ.நா சபை முடிவுசெய்துள்ளது.
இலங்கையில் நடைபெற உள்ள இந்தமாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த 400 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் மோடி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியைப் பார்வை யிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் இரண்டாவது இலங்கைப்பயணம் இது. இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.