உ.பி.,யில், 105 அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ்பாதுகாப்பை நீக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டு உள்ளது. அதேநேரத்தில், முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், முலாயம்சிங், மாயாவதி ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பில், எந்தமாற்றமும் செய்யப்படவில்லை.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைத்தஉடன், கடந்த ஒருமாதமாக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, யோகி ஆதித்யநாத் எடுத்துவருகிறார்.
'வி.ஐ.பி., என்ற கவுரவத்தை காட்டுவதற்காக, சிலர் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இதுபோன்ற அரசியல்வாதி உள்ளிட்ட, முக்கியநபர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்படும்
அல்லது நீக்கப்படும்' என, முதல்வர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரசியல்வாதி களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து, நேற்று முன்தினம் ஆராயப் பட்டது.
உ.பி.,யில் தற்போது, 151 வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதில், 105 பேருக்கான பாதுகாப்பு, முற்றிலுமாக ரத்துசெய்யப்படுவதாகவும், சிலருக்கு பாதுகாப்பு குறைக்கப்படுவதாக வும், உ.பி., அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
அதேநேரத்தில், முன்னாள் முதல்வர்களான, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங், அந்தகட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுவரும், 'இசட்பிளஸ்' பாதுகாப்பில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும்வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தமுடிவு, உடனடியாக அமலுக்கு வருவதாக, உ.பி., அரசு தெரிவித்துள்ளது.
சமாஜ் வாதியின் சிவ்பால்யாதவ், அசம்கான், டிம்பிள் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டு உள்ளது. பா.ஜ., பொதுச்செயலரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான சதீஷ் சந்திரமிஸ்ரா, சமாஜ் வாதியின் அஷு மாலிக் உள்ளிட்டோருக்கான பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்படுகிறது.
இதனிடையில், உ.பி.,யில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியரின்வருகையை பதிவுசெய்யும், 'பயோ மெட்ரிக்' எனப்படும், கைவிரல் பதிவுசெய்யும் திட்டத்தை, உடனடியாக செயல்படுத்த, உ.பி., அரசு உத்தரவிட்டு உள்ளது.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.