நோயாளர் பிணி தீர்க்கும் மருத்துவர் பணி தெய்வீகப்பணி
நோயாளிக்கு சேவை இறைப்பணிக்கு இணை.
மருத்துவ தொழிலின் மேன்மை அறிந்து தொழிலின் தர்மம் காப்போம். அழிந்து வரும் மருத்துவதொழில் புனிதம் காக்க –
அரசு மருத்துவமனைகள் பொதுமக்களிடம் இழந்து விட்ட நம்பிக்கையை மீட்டெடுக்க –
பயிற்சி மருத்துவர்கள் ஃ மருத்துவ மாணவர்கள் பணிக்கு திரும்ப தமிழிசையின் உருக்கமான வேண்டுகோள்.
அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் பேரிலும் சுகாதார துறை அமைச்சர் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 18 நாள் போராட்டம் நோயாளிகளுக்கு ஏற்பட்ட பெரும்பாதிப்பு முடிவுக்கு வந்த நல்ல செய்தி கேட்ட பின்;பும் இன்னமும் சில சுயநலவாதிகளின் கைப்பாவையான சங்கங்களின் தூண்டுதலால், அப்பாவி மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின்;; போராட்டம் இன்னமும் தொடரும் என்ற செய்தி கவலை அளிக்கிறது.
50% இட ஒதுக்கீடு ரத்து என்ற நீதிமன்ற ஆணையால் உடனடி பாதிப்படைந்த அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்ட நிலையில் மாணவர்கள் வேலை நிறுத்தம் தொடர்வது நல்லதா? உங்கள் படிப்பையும், பணியையும் பாதிக்காதா? சிந்திக்க வேண்டும்.
அரசுப்பணியில் இருப்பவருக்கு 50% இட ஒதுக்கீடு 30 ஆண்டுக்கு முன்னர் வந்த ஒப்பந்தம். அன்றைய சூழலில் தமிழகத்தில் சுமார் 10, 12 மருத்துவ கல்லூரிகள் தான் இருந்தன. இறுதியாண்டு MBBS முடிந்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி முடிப்பதற்குள் அனைவருக்கும் அரசுப்பணி ஆணை வழங்கப்படுவார்கள். அதில் பாதிபேர் கிராமங்களுக்கு போக மறுத்து பணி சேர மாட்டார்கள். அவர்களை ஊக்கப்படுத்த கொண்டு வந்த பட்டமேற்படிப்பு 50% இட ஒதுக்கீட்டின் மூலம் மொத்தமுள்ள சுமார் 1000 இடங்களில் பாதி இடங்கள் அவர்களுக்கு முன்னுரிமை.
படிக்கும் காலத்தில் அவர்களுக்கு அரசின் முழுசம்பளம். கிராமப்புற பணிக்காக ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் வீதம் 5 வரை நுழைவுத்தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படும். படிக்கும் காலமும் அரசு பணி செய்த காலமாக கணக்கிடப்படும். அவர்களுக்கு பதவி உயர்வு, பணி ஓய்வு காலத்திற்கு கணக்கிடப்படும்.
இன்றைய சூழலில் சுமார் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள், 24 தனியார் கல்லூரிகள் மொத்தம் 48 கல்லூரிகளில் தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் கல்லூரிக்கு 100 டாக்டர் வீதம் குறைந்த பட்சம் 4800 டாக்டர்களாக வெளிவரும் சூழலில் அரசுபணி ஆண்டுக்கு சில நூறு பேருக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் அன்றைய சலுகைகள் தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.
படிக்க வந்த நீங்கள் உன்னதமான சேவை ஆற்றி ஏழை, எளிய மக்களின் வணங்கும் தெய்வங்களாக திகழ வேண்டிய நீங்கள் உயிரோடு சமாதியும் குண்டூசி குத்தி ரத்தம் சிந்துவது யாருக்காக?
யார் தூண்டுதலில் என்பதை நாடறியும்.
உலகெங்கும் தோற்றுப்போன கம்யூனிசத்தையும் – இந்திய தேர்தல் களத்தில் காணாமல் போய் கொண்டிருக்கும் சிலர் சமூகநீதி, டாக்டர் என்ற போர்வையில் உங்களை திசைமாற்றி செல்வதை உணர வேண்டும். காட்டிற்குள் நக்சலைட்டுகள் ஃ மாவோயிஸ்டுகள் ஃ நாட்டிற்குள் பல புனைப் பெயர்களில் தங்கள் அடையாளங்களை மறைத்து பல சங்கங்கள் என்ற பெயரில் உங்களை போராட்டத் தூண்டுபவர்களின் வலையில் விழ வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
தமிழகத்தின் தொழில் அமைதியை கெடுத்து ஸ்டான்டர் மோட்டார் பின்னி – சிம்சன் போன்ற தொழிற்சாலைகளை மூட வைத்து தொழிலாளர்களை நடுத்தெருவில் அலையவிட்டனர்.
புனிதமான மருத்துவமனைகளை போராட்டம் என்ற பெயரில் மூட வைத்து – ஏழை எளியவர்களை தனியார் மருத்துவமனைகளை நாடி ஒடும் நிலைக்கு தள்ளி விட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னமும் போராட்டம் தொடர வேண்டுமாம். மருத்துவர்கள் ஃ மாணவர்கள் ஃ தொழிலாளிகள் ஃ வியாபாரிகள் என்ற பல சங்கங்களை ஒன்றிணைத்து நின்ற போராட்டக்களமாக தமிழகத்தை மாற்ற நினைக்கும் கம்யூனிஸ்டுகளின் நயவஞ்சகத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள் சங்கம் புரிந்து கொண்டது.
மாணவச்செல்வங்கள் விழிப்படைய வேண்டும் உன்னதமாக மருத்துவப்பணியின் மேன்மை காக்க கல்லூரிக்கு திரும்புங்கள். படிப்பில் கவனம் செலுத்தி பாராட்டுக்களை பெறுங்கள். போராட்டங்களால் அல்ல.
நோயுற்ற தனது உடலையே ஆண், பெண் பாகுபாடின்றி நமக்கெல்லாம் பாடமாக
நோயுற்று படுக்கையில், படுத்திருந்த போதும் மருத்துவ மாணவர்களாக நமக்கு பாடப்புத்தகமாக மாறி அனுபவத்தையும் மருத்துவ அறிவையும் சொல்லிக் கொடுக்கும் நோயோடு நோயின் கடுமை தன்னை வாட்டிக் கொண்டிருந்தாலும் ஒரு தாயின் கருணையோடு தன் நோயை புத்தகமாக மாணவர்களுக்கு அர்பணிக்கும் அரசு மருத்துவமனை நோயாளிகளை வாட்டி வதைக்கலாமா? அவர்களுக்கு சேவை செய்வது நம் கடமை அல்லவா, சேவை செய்து பெருவோம் பாராட்டுக்களை, போராட்டங்களால் அல்ல.
என்றும் மக்கள் பணியில்
(Dr. தமிழிசை சௌந்தர்ராஜன்)
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.