ராமனாய் மாறுகிறார் நரேந்திர மோடி!

     ராமன் இந்த நாட்டின் அரசன்! சகல வல்லமை படைத்தவன்! சீர்மிகு ஆட்சி புரிந்தவன்! ஓயாது உழைத்தவன்! அரக்கர்களை அழிப்பது என சபதம் ஏற்று வென்றவன்! ராமனுடைய பெயர் இன்று இந்த நாட்டவர்களின் வாய் மொழி மந்திரமாக இருக்கிறது!

     “ராம்” என்னும் சொல்லுக்கு அடுத்தசொல்லாக இன்று ”மோடி” என்னும் சொல் இருக்கிறது! குஜராத்தில் முதல்வர் பதவியையோ பிரதமர் பதவியையோ அவர் தேடிப்போகவில்லை! முதல்வர் பதவியும் பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது! திறமை இருப்போரிடம் பதவிகள் தேடி வரும் என்னும் நம்பிக்கை சொல் மோடி விசயத்தில் நிஜமாகியிருக்கிறது!

     நரேந்திர மோடி அவர்கள் 2002 ல் முதல்வரானார்! குஜராத்தில் எந்த முதல்வரும் செய்யாததை மோடி செய்தார்! எல்லோருக்கும் தடையற்ற சுத்தமான குடிநீர், விவசாயத்திற்கு தேவையான நீர்பாசனம், விவசாயத்திற்கும் வீடுகளுக்கும் தொழில்கூடங்களுக்கும் தடையற்ற மும்முனை மின்சாரம்! – இவற்றை தருவதென திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிப்பெற்றார்!

     அஸ்வத்தாமாவின் அணுக்குண்டு வீச்சால் பாலைவனமான தார்பாலைவனத்தின் ஒரு பகுதி குஜராத் மாநிலத்தில் உள்ளது! வறண்ட பூமி அது! அங்கு எல்லோருக்கும் குடிநீர் வசதி மின்சார வசதி என்பது சாதாரணமான சவால் அல்ல!

     மழை பெய்த உடன் எங்கெல்லாம் மாநிலத்தில் தண்ணீர் தேங்குகிறதோ, அங்கெல்லாம் குஜராத் மாநில அரசின் லாரிகள் மணல் மூட்டைகளோடு வரைந்து செல்லும். மழைநீர் தேங்கியிருக்கும் இடத்தை சுற்றி மணல் மூட்டைகளால் கரை அமைக்கப்படும்! அந்த அமைப்பின் பெயர் விவசாய மழைநீர் குட்டைகள்! நர்மதா என்னும் வரலாற்று பெருமை மிக்க நதி உட்பட அங்கு 27 நதிகள் உள்ளன! ஆனால் அவை அனைத்தும் தாழ்வான பகுதிகளில் ஓடுகின்றன! பெரும்பகுதி மேடாக இருப்பதாலும் பூகோள ரீதியில் குஜராத் வரட்சி மாநிலமாகும்!

    அனைத்து நதிகளையும் ஒன்றோடு ஒன்று இணைத்து, அனைத்து நதிகளிலும் தடுப்பணைகளை கட்டினார் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி! விவசாய குட்டைகள் உட்பட மொத்தத்தில் ஐந்து லட்சம் நீர் நிலைகள் முதல்வர் நரேந்திர மோடியால் குஜராத்தில் உருவாக்கப்பட்டது! வளம் கொழிக்கும் மாநிலமாக குஜராத் மாறியது!

     2002 முதல், 2014 ல் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்படும் வரை குஜராத் முதல்வராக நீடித்தார் மோடி! இப்போதும் குஜராத்தில் பாஜக ஆட்சியே தொடருகிறது!

    பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும்வரை அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததில்லை என்பது அதிசயமான செய்தியாகும்! சகல வசதிகளோடு ஒரு தேசிய கட்சியின் முதல்வராக 12 ஆண்டுகாலம் பணியாற்றியவர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்ததேயில்லை என்பது சாதாரண செய்தியல்ல! தான் உண்டு தனக்கென கொடுக்கப்பட்ட பொறுப்பு உண்டு என கருமமே கண்ணாக செயல்படுபவர் நமது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்!

     நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளை மிதிப்பதற்கு முன்பாக அந்த படிக்கட்டில் தனது சிரசினை வைத்து வணங்கிவிட்டு, மோடி சொன்ன வார்த்தை “ஜனநாயகத்தின் கோயிலில் நான் நுழைகிறேன்” என்பதாகும்!

     பல அரசியல் கட்சிகளின் சூது களமாக சம்பாதிக்கும் இடமாக மாறிப்போன நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனநாயக கோயில் என்று குறிப்பிட்டு, அப்படியே நடைமுறைப்படுத்திவரும் முதல் இந்திய தலைமகன் நரேந்திர மோடிதான்!

     ஜனநாயக கோயிலில் நுழைவது என முடிவு மேற்கொண்டதிலிருந்து, அதாவது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்றுவரை ஓய்வே எடுக்கவில்லை!

    மோடி பிரதமராக தலைமைச் செயலகத்திற்கு வர ஆரம்பித்ததில் இருந்து, தலைமை செயலகத்தின் தலைவிதியே மாறிவிட்டது! அலங்கோலமாக கிடந்த அலுவலகங்கள் சீர்செய்யப்பட்டன! அலுவலர்கள் சரியான நேரத்தில் அலுவலகம் வந்தார்கள்! வேலைகள் சரியாக நடக்கத்துவங்கின! சூரியனை கண்ட பனிபோல குற்றங்கள் மறைந்தன! காரணம், பிரதமர் அலுவலகத்திற்கு காலை 8 மணிக்கு வருகிறார்! அலுவலக நேரம் முடிந்தபிறகும் அலுவலகத்தில் இருக்கிறார்! பயணத்தில் இருந்தாலும் அலுவலகத்தை கவனிக்கிறார்! பிரதமர் நேர்மையானவர், கண்டிப்பானவர், தேசத்தை தெய்வமாக மதிப்பவர் என்னும் உண்மை எல்லோருக்கும் தெரிந்துவிட்டது! எனவே அனைத்து அதிகாரிகளும் தங்களை திருத்திக்கொண்டனர்!

     ஒவ்வொரு இந்தியனிலும் அவர் தன்னை பார்க்கிறார்! ஒவ்வொரு இந்தியனின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறார், பிரதமர் நரேந்திரமோடி!

     கறுப்புப்பணம் மற்றும் கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கை என்பது உலக புகழ்மிக்க நடவடிக்கையாகும்! இந்த பணியின் தொடர் நடவடிக்கை இன்னும் நடந்துக்கொண்டிருக்கிறது! பல கைதுகளும் பல விசாரணைகளும் இதன் தொடர்பாகவே நடக்கின்றன! தேசத்தின் மிகப்பெரிய அழுக்கு கழுவப்பட்டிருக்கிறது! தீய அரசியல்வாதிகளையும் மிகப்பெரிய கள்ளப்பண்ண கருப்புப்பண முதலைகளையும் எதிர்த்து ஏழை மக்களுக்காகவும் நேர்மையாளர்களுக்காகவும் மோடி மேற்கொண்ட சவாலான நடவடிக்கைதான் இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை! இங்கேதான் அரக்கர்களை வதம் செய்த ராமனின் தோற்றத்தை நான் மோடியிடம் பார்க்கிறேன்! தொடர்ந்து பினாமி சொத்து ஒழிப்பு நடவடிக்கை தொடரப்போவதாக சொல்லியுள்ள பிரதமர் மோடியை நேர்மையாளர்கள் அனைவருமே கையெடுத்து தொழவேண்டும்!

     இந்தியர்கள் அனைவருக்கும் வங்கியில் இலவச கணக்கு! அந்த கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு இலவச காப்பீடு! ரூபாய் 5000 முதல் 15000 வரை அனைவருக்கும் கடன் உதவி! அரசு அலுவலர்களுக்கு இருப்பதைபோல எல்லோருக்கும் ஓய்வூதிய திட்டம்! எல்லோருக்கும் ஆயுள் காப்பீடு, எல்லோருக்கும் விபத்துக் காப்பீடு! எல்லோருக்கும் தொழில் செய்ய, வியாபாரம் செய்ய, உத்திரவாதமும் ஜாமீன் கையெழுத்தும் பெறப்படாமலேயே நிதி உதவி! இளைஞர்கள் தொழில் துவங்க கோடிக்கணக்கில் நிதி உதவி! குறைந்த பிரிமியத்தில் பயிர் காப்பீடு! கர்ப்பிணி பெண்களுக்கு நீண்டநாள் ஊதியத்துடன் விடுப்பு மற்றும் நிதி உதவி! நாட்டின் 100 நகரங்கள் ஸ்மார் சிட்டி!

500 நகரங்கள் அம்ருத் நகர்கள் என நாட்டின் அனைத்து நகரங்களின் முன்னேற்றத்திற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் கட்டமைப்பு திட்டங்களும் மக்கள்நல  திட்டங்களும்! (தமிழகத்தில் 12 மாநகர்களும் 33 நகரங்களும் இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசால் முன்னேற்றப்பட்டு வருகிறது) இந்தியாமுழுமையும் சுத்தப்படுத்தும் தூய்மை இந்தியா திட்டம்! கங்கை நதி உட்பட அனைத்து நதிகளையும் தூய்மைப்படுத்தும் திட்டம்! (கூவம் நதி போன்ற தமிழக நதிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்) நாடு முழுமையும் வீடில்லாத 5 கோடி நபர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம்! 5 கோடி இலவச எரிவாய்வு இணைப்பு திட்டம்! தொழில் துவங்க அனுமதி பெறுவதில் இருந்த முட்டுக்கட்டை நீக்கம்! ரயில் பயணங்களின்போது ஒரே ரூபாயில் காப்பீட்டுத்திட்டம்!

நாடு முழுமையும் அதிவேக ரயில்கள் மற்றும் சுரங்க ரயில்கள்! ஒவ்வொரு இந்தியனையும் மதித்து அங்கீகரிக்கும் வகையில், சுய சான்று வழங்கும் தகுதி! ஊழலை ஒழிக்க வங்கிகளில் மானியத்தொகை செலுத்தப்படுவது! நூறுநாள் வேலையின் நாட்களும் ஊதியமும் உயர்த்தப்பட்டிருப்பது! முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தினை உயர்த்தியது! காவிரியின் குறுக்கே கர்னாடகம் அணை கட்ட தடை! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி! ஊழலை தடுக்க மத்திய அரசின் நிலை-மூன்று மற்றும் நிலை-நான்கு பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு ரத்து! மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி பங்கீட்டில் 10 சதவிகிதம் உயர்வு! பத்தாம் வகுப்பில் 75 சதவிகிதம் மார்க் வாங்கினால் ரூபாய் 10000 மும், 12 ம் வகுப்பில் 85 சதவிதம் வாங்கினால் ரூபாய் 25000 வழங்குவது!  பயங்கரவாதம் ஒழிப்பு நடவடிக்கைகளில் முன்னிலை! அன்னிய முதலீடு வருகை அதிகரிப்பு, நாட்டின் வளர்ச்சி சதவிகிதம் 4.5 புள்ளுகளிலிருந்து 7 புள்ளிகளாக வளர்ச்சி! எல்லை தாண்டிய பயங்கரவாத்த்தை எல்லை தாண்டி அழிக்கும் துணிச்சல்! – இப்படி எண்ணற்ற சாதனைகள் உள்ளன!

     இவை அனைத்திற்கும் மேலே மணிமகுடமாக வழங்குவது என்னவென்றால்,  மூன்றாண்டுகால ஆட்சியில் எவ்வித ஊழலும் இல்லை என்பதுதான்! ஊழல் இல்லாதது மட்டுமல்ல, ஊழல்வாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலும் மோடி தெளிவாக செயல்படுகிறார்! ஊழலை ஒழிக்கும் துறைகளான புலனார்வு துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் நேர்மையான செயல்பாட்டில் அரசின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வதாலேயே இப்போது ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் விரைவாக நடைபெறுகின்றன!

     மக்களின் பிரச்சனைகளை தெரிந்துக்கொள்ள, தனியாக வலைத்தளம் நிறுவிய முதல் பிரதமர் மோடிதான்! எண்ணற்ற மக்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கப்படுகிறது! அரசு துறைகள் முடுக்கி விடப்படுகின்றன! மக்களின் கருத்தறிந்து தனது கருத்துக்களையும் மாதாமாதம் வானொலியில் பகிர்ந்துக் கொண்டு வெளிப்படையான ஆட்சி நடத்தும் முதல் இந்தியப்பிரதமர், நமது நரேந்திர மோடியே ஆவார்!

    ஐந்தாண்டுகால ஆட்சியின் நிறைவின்போது என்னுடைய பிராக்கிரஸ் கார்டினை நான் மக்களிடம் ஒப்படைப்பேன்! அப்போது மக்கள் மார்க் போடலாம்! என்று மோடி அவர்கள் சொல்லியுள்ளார்கள்! இந்த மூன்றாண்டுகள் செயல்பாட்டிற்கே மக்கள் 100 சதவிகித மார்க் போட்டுவிட்டார்கள் என்பதை நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல் வெற்றிகள் உணர்த்திவிட்டன! வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி என்பது, பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடெங்கிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டாக சூட்டப்போகும் மணிமகுடமாகும்!

    மொத்தத்தில் முடிந்த மூன்றாண்டுகளில் ஊழலை ஒழித்து மக்களை காக்கும் ராமபிரானாகவே நரேந்திரமோடி அவதார தோற்றமளிக்கிறார் என்பதுதான் உண்மை!

–    குமரிகிருஷ்ணன்.  

2 responses to “ராமனாய் மாறுகிறார் நரேந்திர மோடி!”

  1. Summary Giri says:

    Always and ever the statements are true

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...