பி.ஜே.பி கூட்டணி, 2019 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் மக்களவைத் தேர்தலில் இப்போது இருப்பதை விட கூடுதலான இடங்களைப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்று ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சிஒன்றில், மத்திய அமைச்சர் வெங்கையநாயுடு கூறினார். மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்து, வரும் 26 ஆம் தேதியோடு மூன்று ஆண்டுகள் முடிந்து, 4-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்நிலையில், அடுத்து வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க, நாடுமுழுவதும் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷா, 95 நாள் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
ஜெய்ப்பூரில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையநாயுடு, "2014-ம் ஆண்டில் 282 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தோம். இப்போது, மோடியின் செல்வாக்கு இன்னும் அதிகரித்துள்ளது. வரும்தேர்தலில், இன்னும் அதிக இடங்களைப் பிடிப்போம். எதிர்க் கட்சித் தலைவர்களில் சிலர் ஜெயிலில் இருக்கிறார்கள். சிலர் பெயிலில் வெளியே உள்ளனர். அவர்கள் இணைவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை. அவர்கள், அரசியலிலிருந்து அவுட் ஆகிவிட்டார்கள். இந்த மூன்றுஆண்டில், மோடி அரசின் மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. சாதி, மத, மொழிமூலம் அரசியல் செய்வோரால் மக்களை இனி ஏமாற்றமுடியாது” என வெங்கைய நாயுடு கூறினார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.