மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனுக்கு மீண்டும் மிரட்டல்

மாட்டிறைச்சிக்கு எதிராக பேசக்கூடாது என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனுக்கு மீண்டும் மிரட்டல் வந்துள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப் படுவதற்கு மத்திய அரசு கடும்கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு ஆதரவாக தமிழிசை சவுந்திரராஜன் பேசி வருகிறார். இந்நிலையில், கடந்தவாரம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில், மாட்டிறைச்சிக்கு எதிராக பேசுவதை தமிழிசை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும்விளைவுகளை சந்திக்க வேண்டிய திருக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.

இது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரித்துவந்த நிலையில், ஜூன் 2ம் தேதி தமிழிசைக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக விருகம் பாக்கம் காவல் நிலையத்தில் தமிழிசை புகார் அளித்திருந்த நிலையில், நேற்று மீண்டும் சாலி கிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டிற்கு ஒருமிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இது குறித்து தமிழிசை அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார், ஏற்கெனவே பாஜக தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவரும், தற்போது கடிதம் அனுப்பியவரும் ஒரேநபரா என்றும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...