மக்களின் உணவுப்பழக்கத்தை மாற்றவேண்டும் என்பதோ, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்பதோ அரசின் நோக்கமல்ல என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்தே இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற விதிகளை மத்திய அரசு வரையறுத்தது. இதுதொடர்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.அதில் சிலதிருத்தங்களை மேற்கொள்ளுமாறு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சிலஅம்சங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. அதுபோன்று நியாயமான கோரிக்கைகளோ அல்லது ஆலோசனைகளோ இருந்தால் அதனை மத்தியஅரசுக்குத் தெரியப்படுத்தலாம்.
அதுகுறித்து ஆய்வு செய்யப்படும். தற்போது இந்தஉத்தரவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்தவிவகாரத்தைப் பொருத்தவரை மக்களின் உணவுப்பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றோ, வர்த்தக நடவடிக்கைகளை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என்றோ திட்டம்வகுத்து இந்நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.