மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மதுக்கடைகளை மூட வேண்டும்

மதுக்கடையை மூடவலியுறுத்தி பா.ஜ.க சார்பில் சென்னையில் இன்று கோட்டையைநோக்கி பேரணி நடைபெற்றது.

சேப்பாக்கத்தில் இருந்து பேரணிபுறப்பட்டது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்தியசெயலாளர் முரளிதரராவ் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் மதுவால் ஏற்படும் சீரழிவை வலியுறுத்தும் வகையில் பாடைகட்டியும், வெள்ளை சேலை கட்டி பெண்களும் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா மது இல்லாத ஆரோக்கியமான தமிழகத்தை விரும்புகிறது. ஆனால் அதிமுக.வும், திமுக.வும் மதுவுக்கு துணைபோகிறது. நாங்கள் பசும்பால் வேண்டும் என்கிறோம். அவர்கள் பட்டைச்சாராயம் வேண்டும் என்கிறார்கள், இதுதான் பா.ஜனதாவுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

பசுவை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் பா.ஜ.க என்றும் துணைநிற்கும் என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் கடைசி கடை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் தமிழக அரசு உடனடியாக கையில் எடுக்கவேண்டிய வி‌ஷயம் ஒன்றை மூடுவது, இன்னொன்றை திறப்பதுதான். அதாவது அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும். அதே நேரத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றியது திமுக. இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பிராயச்சித்தம் தேடப்போகிறார். ஒருகாலத்தில் இந்துக்களை திருடர்கள் என்று கூறியவர்கள் இன்று கோவில் குளங்களை தூர்வாரி பாவ விமோசனம் தேடிக்கொள்கிறார்கள்.

படித்து பழகு என்று சொல்ல வேண்டியவர்கள், குடித்துபழகு என்று தமிழகத்தை ஆக்கிவிட்டார்கள். எனவே ஒருகட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிட கட்சி இருக்கமுடியாது, இந்த நாட்டை காவிகள் ஆளலாம், பாவிகள் ஆளக்கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...