ஜனாதிபதி வேட்பாளரை முடிவுசெய்வதற்கான பா.ஜ.க, ஆட்சிமன்றகுழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தகூட்டத்திற்கு பிறகு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தற்போது பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வுசெய்திருப்பதாக அறிவித்தார்.
இவர் உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டவர். வழக்கறிஞரான இவர், 2015 ஆகஸ்ட் 8 ம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 1945, அக்., 1 ம் தேதி கான்பூரில் பிறந்தவர், பா.ஜ., தலித்பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71. இவர், ஜூன், 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என அமித்ஷா தெரிவித்தார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.