பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் 3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இயக்குநர் பதவியை உருவாக்குதல், துணைராணுவ படைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வுவயதினை அதிகரித்தல் போன்ற விசயங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.
அதன்படி, மத்திய ஆயுத போலீஸ்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணியாற்றும் பொதுமருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் ஆகியோரது ஓய்வு வயது 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது.
இதனால் மத்திய ரிசர்வ்போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்புபடை, இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பேரிடர் மேலாண்மை படை, தேசிய பாதுகாப்புபடை மற்றும் சஹஸ்திர சீமா பல் ஆகிய மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பலனடைந்திடுவார்கள்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.